யத்ர யோகே ஷ்வர :
க்ருஷ்ணோ யத்ர பார்தோ , தனுர் – தர :
தத்ர ஷ் ரீர் விஜயோ பூதிர்
த்ருவா நீதிர் மதிர் மம
யத்ர – எங்கு ; யோகே ஷ் வர : -யோகிகளின் இறைவனான ; க்ருஷ்ண : பகவான் கிருஷ்ணர் ; யத்ர – எங்கு ; பார்த : – பிருதாவின் மைந்தனே ; தனு : தர : – வில்லையும் அம்புகளையும் ஏந்திய ; தத்ர – அங்கு ; ஸ்ரீ : – செல்வம் ; விஜய : – வெற்றி ; பூதி : – அசாதாரணமான வலிமை ; த்ருவ : – நிச்சயம் ; நீதி : நீதி ; மதி : மம – எனது அபிப்பிராயம்.
யோகிகளின் இறைவனான கிருஷ்ணர் எங்கெல்லாம் இருக்கின்றாரோ , உன்னத வில்லாளியான அர்ஜுனன் எங்கெல்லாம் இருக்கின்றானோ , அங்கெல்லாம் நிச்சயமாகச் செல்வமும் வெற்றியும் அசாதாரணமான வலிமையும் நியாயமும் இருக்கும் என்பது எனது அபிப்பிராயம் .
பொருளுரை : பகவத் கீதை திருதராஷ்டிரரின் கேள்வியுடன் தொடங்கியது. பீஷ்மர், துரோணர், கர்ணன் போன்ற மாபெரும் வீரர்களின் உதவியால் தனது மகன்களது வெற்றியின் மீது அவர் நம்பிக்கை கொண்டிருந்தார் வெற்றி தன் பக்கமே என்று அவன் நம்பியிருந்தான் . ஆனால் போர்க்களத்தின் நிலையை விவரித்த பிறகு , ” நீங்கள் வெற்றியைப் பற்றி எண்ணிக் கொண்டுள்ளீர் , ஆனால் எனது அபிப்பிராயம் என்னவெனில் , கிருஷ்ணரும் அர்ஜுனனும் எங்குள்ளார்களோ , அங்கே எல்லா நல்லதிர்ஷ்டங்களும் இருக்கும் ” என்று மன்னனிடம் சஞ்ஜயன் கூறுகின்றான் . திருதராஷ்டிரர் தனது பக்கத்தில் வெற்றியை எதிர்பார்க்க முடியாது என்று அவன் நேரடியாக உறுதி செய்கின்றான். கிருஷ்ணர் அர்ஜுனனின் பக்கத்தில் இருப்பதால் , அங்கு வெற்றி நிச்சயம் . அர்ஜுனனின் சாரதி என்னும் நிலையை கிருஷ்ணர் ஏற்றுக் கொண்டது அவரது மற்றொரு ஜஸ்வர்யத்தைக் காட்டுகின்றது . கிருஷ்ணர் எல்லா ஐஸ்வர்யங்களும் பூரணமாக நிறைந்தவர் , அவற்றில் ஒன்று துறவு . இத்தகு துறவினை வெளிக்காட்டும் பற்பல சம்பவங்கள் உள்ளன ; ஏனெனில் , கிருஷ்ணரே துறவிற்கும் எஜமானர் .
உண்மையில் , போர் துரியோதனனுக்கும் யுதிஷ்டிரருக்கும் இடை யிலானது . அர்ஜுனன் தனது மூத்த சகோதரரான யுதிஷ்டிரரின் சார்பில் போர் புரிந்து கொண்டிருந்தான் . கிருஷ்ணரும் அர்ஜுனனும் யுதிஷ்டிரரின் பக்கம் இருந்ததால் , யுதிஷ்டிரருடைய வெற்றி நிச்சயம் . உலகை ஆள்வது யார் என்பதை முடிவு செய்வதற்காக போர் நடைபெற உள்ளது . ஆட்சி யுதிஷ்டிரரின் கைக்கு மாற்றப்படுவது நிச்சயம் என்று சஞ்ஜயன் இங்கு முன்னுரைக்கின்றான் . அதுமட்டுமின்றி , போரில் வெற்றி பெற்ற பிறகு , யுதிஷ்டிரர் மேன்மேலும் செழிப்படைவார் ; ஏனெனில் , அவர் புண்ணியமான தர்மாத்மா மட்டுமின்றி நீதிநெறி தவறாதவர் . அவர் தனது வாழ்வில் ஒருமுறைகூட பொய் சொல்லாதவர்.
இரு நண்பர்களுக்கிடையே போர்க்களத்தில் நடைபெற்ற ஒரு விவாதமாக மட்டுமே பகவத் கீதையை எடுத்துக்கொள்ளும் சிற்றறிவாளர்கள் பலர் உள்ளனர் . ஆனால் அத்தகு நூல் சாஸ்திரமாக முடியாது . போரிடுதல் என்னும் நீதிக்குப் புறம்பான செயலில் ஈடுபடுமாறு அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் அறிவுரை கொடுத்திருக்கிறாரே என்று சிலர் எதிர்க்கலாம் , ஆனால் , நீதியின் உன்னத உபதேசம் பகவத் கீதையே என்னும் உண்மை நிலவரம் இங்குத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது . நீதியின் பரம உபதேசம் என்னவெனில், மன் -மனா பவ மத் , பக்த: , கிருஷ்ணரது பக்தனாக ஆக வேண்டும் – இஃது ஒன்பதாம் அத்தியாயத்தின் முப்பத்து நான்காவது இதத்தில் கூறப்பட்டது . மேலும் , எல்லா தர்மத்தின் சாரமும் கிருஷ்ணரிடம் சரணடைவதே ( ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷ்ரணம் வ்ரஜ ). பகவத் கீதையின் உபதேசங்கள் பரம தர்மத்தையும் நீதியையும் உள்ளடக்கியுள்ளன . மற்ற முறைகள் தூய்மைப்படுத்தலாம் , இந்த முறையினை அடைவதற்கு ஒருவனுக்கு வழிகாட்டலாம் , ஆனால் எல்லா தர்மத்திற்கும் நீதிக்கும் இறுதியாக விளங்குவது கீதையின் இறுதி உபதேசமான ” கிருஷ்ணரிடம் சரணடை ” என்பதே . இதுவே பதினெட்டாவது அத்தியாயத்தின் தீர்ப்பாகும்.
பகவத் கீதையிலிருந்து நாம் புரிந்துகொள்ளக்கூடியது யாதெனில் , தத்துவக் கற்பனையாலும் தியானத்தினாலும் தன்னுணர்வை அடைதல் ஒரு முறை , ஆனால் கிருஷ்ணரிடம் சரணடைதல் உன்னதமான பக்குவநிலை . பகவத் கீதையின் உபதேச சாரம் இதுவே . பல்வேறு விதமான தர்மத்தின் அடிப்படையிலும் வர்ணத்தின் அடிப்படையிலும் செய்யப்படும் மதச் சடங்குகள் , ஞானத்தின் இரகசியமான பாதையாகக் கருதப்படலாம் . ஆனால் மதச் சடங்குகள் இரகசியமானவை என்றபோதிலும் , தியானமும் ஞானத்தை விருத்தி செய்வதும் அதைவிட இரகசியமானவை . மேலும் , பூரண கிருஷ்ண உணர்வுடன் பக்தித் தொண்டில் கிருஷ்ணரிடம் சரணடைவதே மிகமிக இரகசியமான உபதேசமாகும் . இதுவே பதினெட்டாம் அத்தியாயத்தின் சாராம்சம் .
பகவத் கீதையின் மற்றொரு விஷயம் என்னவெனில் , புருஷோத்தம ரான முழுமுதற் கடவுள் கிருஷ்ணரே பரம் உண்மை . அருவ பிரம்மன் , பரமாத்மா , இறுதியில் புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கிருஷ்ணர் என்று மூன்று நிலைகளில் பூரண உண்மை உணரப்படுகின்றது . பூரண உண்மையைப் பற்றிய பக்குவமான ஞானம் என்றால் , கிருஷ்ணரைப் பற்றிய பக்குவ ஞானம் என்பது பொருள் . ஒருவன் கிருஷ்ணரைப் புரிந்து கொண்டால் , ஞானத்தின் அனைத்து துறைகளும் அந்த அறிவின் அம்சமாகி விடுகின்றன . தனது நித்தியமான அந்தரங்க சக்தியில் எப்போதும் நிலைபெற் றிருக்கும் கிருஷ்ணர் , தெய்வீகமானவர் . அவரது சக்தியிலிருந்து தோன்றிய உயிர்வாழிகள் , நித்தியமாக கட்டுண்டவர்கள் , நித்தியமாக முக்தி பெற்ற வர்கள் என இருவகைப்படுவர் , எண்ணிலடங்காத அத்தகு உயிர்வாழிகள் கிருஷ்ணரின் முக்கியப் பகுதிகளாகக் கருதப்படுகின்றனர் . ஜட இயற்கை இருபத்துநான்கு பிரிவுகளில் தோற்றுவிக்கப்படுகின்றது . நித்தியமான காலத்தால் உண்டாகும் படைப்பு , வெளிப்புற சக்தியால் உருவாக்கப்பட்டு அழிக்கப்படுகின்றது . அகிலத்தின் இந்த படைப்பு , மீண்டும் மீண்டும் தோன்றி மறைகின்றது .
பகவத் கீதையில் ஐந்து முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன : பரம புருஷ பகவான் , ஜட இயற்கை , உயிர்வாழிகள் , நித்தியமான காலம் , மற்றும் எல்லாவிதமான செயல்கள் . இவையனைத்தும் பரம புருஷ பகவானான ஸ்ரீ கிருஷ்ணரையே சார்ந்துள்ளன . பாம் புருபகவானைப் புரிந்துகொள்ளுதல் என்னும் பிரிவின் கீழ் , அருவ பிரம்மன் , பரமாத்மா , மான் உண்மையின் இதர தெய்வீக கருத்துகள் என அனைத்தும் அடங்கும் . பால் புருஷ பகவான் , ஜீவாத்மா , ஜட இயற்கை , காலம் ஆகியவை மேலோட்டமாகப் பார்ப்பதற்கு வேறுபட்டவையாகத் தோன்றினாலும் , அவற்றில் எதுவுமே பரமனிலிருந்து வேறுபட்டதல்ல . ஆனால் பரமனோ ஒவ்வொன்றிலிருந்தும் எப்போதும் வேறுபட்டவர் . ” சிந்தனைக்கு அப்பார் பட்ட ஒற்றுமையும் வேற்றுமையும் ” எனப்படும் பகவான சைதன்யரின் தத்துவம் , பூரண உண்மையின் பக்குவ ஞானத்தை உள்ளடக்கியதாகும் .
உயிர்வாழி தனது உண்மையான நிலையில் தூய்மையான ஒரு ஆன்மா அவன் பரம ஆன்மாவின் அணுவைப் போன்ற அம்சம் . எனவே , பகவான் கிருஷ்ணரை சூரியனுடனும் உயிர்வாழிகளை சூரியக் கதிர்களுடனும் ஒப்பிடலாம் , உயிர்வாழிகள் கிருஷ்ணரின் நடுத்தர சக்தி என்பதால் , அவர்கள் ஆன்மீக சக்தியுடனும் தொடர்பு கொள்ளலாம் . ஜட சக்தியுடனும் தொடர்பு கொள்ளலாம் . வேறு விதமாகக் கூறினால் , உயிர்வாழி , இறைவனின் இரண்டு சக்திகளுக்கு நடுவில் அமைந்துள்ளான் . மேலும் , அவன் இறைவனின் உயர்ந்த சக்தியைச் சேர்ந்தவன் என்பதால் , அவனுக்குச் சிறு சுதந்திரம் இருக்கின்றது . அந்த சுதந்திரத்தை முறையாக உபயோகிப்பதால் அவன் கிருஷ்ணரின் நேரடி கட்டளையின் கீழ் வர முடியும் . இவ்வாறு , ஆனந்தம் தரும் சக்தியில் அவன் தனது இயற்கையான நிலையை அடைகின்றான்.