Sunday, December 22

பகவத் கீதை – 11.44

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

தஸ்மாத் ப்ரணம்ய ப்ரணிதாய காயம்
ப்ரஸாத யே த்வாம் அஹம் ஈஷம் ஈட்யம்
பிதேவ புத்ரஸ்ய ஸகே வ ஸக்யு:
ப்ரிய: ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும்
வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்

தஸ்மாத்—எனவே; ப்ரணம்ய—வணக்கங்களை சமர்பிக்க; ப்ரணிதாய—கீழே விழுந்து; காயம்—உடல்; ப்ரஸாதயே—கருணையை வேண்டி; த்வாம்—உம்மிடம்; அஹம்—நான்; ஈஷம்—பரம புருஷரிடம்; ஈட்யம்—வந்தனைக்குரிய; பிதா இவ—தந்தையைப் போன்று; புத்ரஸ்ய—மகனுடன்; ஸகா இவ—நண்பனைப் போன்று; ஸக்யு:—நண்பனிடம்; ப்ரிய:—பிரியமானவன்; ப்ரியாயா:—பிரியமானவளிடம்; அர்ஹஸி—தாங்கள்; தேவ—என் இறைவனே; ஸோடும்—பொறுத்துக் கொள்ள வேண்டும்.

மொழிபெயர்ப்பு
ஒவ்வோர் உயிர்வாழியாலும் வணங்கப்பட வேண்டிய பரம புருஷர் நீரே. எனவே, நான் எனது மரியாதைக்குரிய வணக்கங்களை கீழே விழுந்து சமர்ப்பித்து உமது கருணையை வேண்டுகிறேன். எவ்வாறு தந்தை தனது மகனுடைய குற்றங்களையும், நண்பன் நண்பனுடைய குற்றங்களையும், கணவன் மனையினுடைய குற்றங்களையும் பொறுத்துக் கொள்கிறார்களோ, அதுபோல, என்னுடைய தவறுகள் அனைத்தையும் தாங்கள் பொறுத்து அருள்வீராக.

பொருளுரை

கிருஷ்ண பக்தர்கள் கிருஷ்ணருடன் பல்வேறு விதங்களில் உறவு கொள்கின்றனர்; கிருஷ்ணரை மகனாகவோ, கணவராகவோ, நண்பராகவோ, எஜமானராகவோ கருதலாம். கிருஷ்ணரும் அர்ஜுனனும் நட்பினால் இணைக்கப்பட்டுள்ளனர். தந்தை பொறுத்துக் கொள்வதுபோல, கணவன் பொறுத்துக் கொள்வதுபோல, எஜமானர் பொறுத்துக் கொள்வது போல, கிருஷ்ணரும் பொறுத்துக் கொள்கிறார்.

1 Comment

  • Kumar Subramanian

    Excellent Reply by Krishna.
    The truth is that all Krishna devotees should follow Him in this respect. If we develop the attitude of forgiveness, there would be end of quarrel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question