தேவையான பொருட்கள் :
சாமை – ¼ kg
உருளை கிழங்கு – 100 கிராம் (2 கிழங்கு)
கேரட்துருவியது – 1 கப்
முட்டை கோஸ் துருவல் – 1 கப்
சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – 10 கிராம்
தேங்காய்துருவல் – ½ கப்
ராக்சால்ட் – தேவையான அளவு
செய்முறை:
சாமையை ¼ மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும், அதற்க்குள் உருளை கிழங்கை குழைய வேக வைத்துக் கொள்ளவேண்டும் சாமையை தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் பருபரு வென்று அரைத்து அதனுடன் தேங்காய் துருவல், இஞ்சி, சீரகம் போட்டு பிறகும் மிக்சியில் 2,3 சுற்று அரைக்க வேண்டும். பின்னர் கேரட், முட்டை கோஸ் துருவல், உப்பு, வேக வைத்த உருளை கிழங்கை தோல் உறித்து அந்த கலவையுடன் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து சோசை மாவு பதத்தில் கரைத்து தோசை வார்த்து எடுக்க வேண்டும்.
வேர்க்கடலை சட்னி
பச்சை வேர்க்கடலை – 100 கிராம்
பச்சைமிளகாய் – 2 பீஸ்
இஞ்சி – சிறிய பீஸ்
ராக்சால்ட் – தேவையான அளவு
தேங்காய்த்துருவல் – ¼ குழிக் கரண்டி (1/2 கப்)
செய்முறை:
முதலில் வானெலியில் வேர்க்கடலையை போட்டு அடுப்பில் தீயை சிம்மில் வைத்து லைட்டாக பிரவுன் நிறம் வரும் வரை வறுத்து கொள்ள வேண்டும் பின்னர் தட்டில் கொட்டி ஆறவிடவும். நன்றாக ஆறியதும் கையில் தேய்த்தால் தோல் நீங்கி விடும். தோலை நீக்கிய வேர்க்கடலையுடன் தேங்காய்த்துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, ராக்சால்ட் அனைத்தையும் மிக்சியில் போட்டு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். வேர்க்கடலை சட்னி தயார்
மிகவும் எளிமையான முறை. அருமையான சத்தான சாத்வீக உணவு.
குறுகிய நேரத்தில் உணவை சமைக்க முடியும்.