Putrada Ekadashi (Tamil) / புத்ரதா ஏகாதசி
https://youtu.be/ploD_JOK7jg
புத்ரதா ஏகாதசி மகிமை - Videoபுத்ரதா ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம்.அர்ஜூனன் ஸ்ரீ கிருஷ்ணரின் பாதாரவிந்தங்களில் நமஸ்கரித்து, சிரத்தையுடனும் பணிவுடனும் கிருஷ்ணரிடம், " ஹே சச்சிதானந்த பரம் பொருளான ஸ்ரீ கிருஷ்ணா!, இப்பொழுது தை மாதம் சுக்லபட்ச ஏகாதசியைப் பற்றி கூறுங்கள்" என்று வேண்டி நின்றான். இந்த ஏகாதசியின் மகத்துவம், அதன் பெயர், அன்று வழிபட வேண்டிய தெய்வம், விரத வழிமுறைகள், இவற்றைப்பற்றி எல்லாம் விரிவாக உபதேசிக்க வேண்டும்" என்றான்.அர்ஜூனின் வேண்டுகோளைக் கேட்ட ஸ்ரீ கிருஷ்ணர்," ஹே ராஜனே, புஷ்ய (தை) மாதம் சுக்ல பட்ச ஏகாதசி, புத்ரதா ஏகாதசி என்னும் பெயரால் அறியப்படுகிறது. முந்தைய ஏகாதசி மஹாத்மியங்களில் கூறிய பூஜை விதிகளின் படி அன்று பூஜை செய்ய வேண்டும். விரதநாளன்று வழிபட வேண்டிய தெய்வம் ஸ்ரீமன் நாராயணன் ஆவார். இவ்வுலகில் புத்ரதா ஏகாதசி விரதத்...