Friday, March 29

ஹே கோவிந்தா ! ஹே கோபால் ! ஓ , கோவிந்தா ! ஓ , கோபால்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

1 .
ஹே கோவிந்த ஹே கோபால் கேசவ மாதவ தீன – தயாள்
2 .
துமி பரம தயாள் பிரபு , பரம தயாள் கேசவ மாதவ தீன தயாள்
3 .
பீத – பஸன பரி மயூரேர ஷிக்கா தோரி முரளீர் வாணி – துலே போலே ராதா நாம்
4.
 துமி மதேர கோபால் பிரபு , மதேர கோபால் கேசவ மாதவ தீன தயாள்
5 .
பவ – பய – பஞ்சன ஸ்ரீ மது – சூதன விபத – பஞ்சன துமி நாராயண
 
1 .
ஓ பசுக்களுக்கு இன்பத்தை அளிப்பவரே ! ஓ பசுக்களை பாதுகாப்பவரே ! ஓ, அழகான சுருண்ட கருங்கேசம் உடையவரே ! ஓ திருமகளின் கணவரே ! இந்த இழிவடைந்த ஆத்மா மீது கருணை கொண்டவரும் நீங்களே.
2 .
நீங்களே எல்லையற்ற கருணா சாகரத்தின் இருப்பிடமாவீர். ஓ பிரபு ! நீங்களே எல்லையற்ற கருணா சாகரத்தின் இருப்பிடமாவீர்.
 
 3 .
ஓ பிரபு , நீங்கள் கண்ணைக் கவரும் மஞ்சள் பட்டாடை அணிந்து, தலைப்பாகையில் எழில் மிகு மயிலிறகுகளை சூடி , மயக்கும் கரங்களில் புல்லாங்குழல் ஏந்தி , ஸ்ரீமதி ராதையின் புகழை அழகாக இசைத்துக் கொண்டு இருக்கும் அழகே, அழகு.
4 .
உமது நண்பர்களான , மாடு மேய்க்கும் இடைச்சிறுவர்கள் உங்களால் பேரானந்தத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். பிரபு ! பேரானந்தத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒ, கேசவா ! ஓ, மாதவா ! ஓ தீனதயாள் !
5 .
இந்த ஜட உலகின் மாய வலையில் சிக்கி , தொடர்ந்த பிறப்பு இறப்பு சூழலில் தவிக்கும் மிகப் பயங்கரமான சூழ்நிலையை உங்களது கருணையால் நீங்கள் முற்றிலும் நீக்கி விடுகின்றீர்கள். உமது கருணையால் அரக்கனான மதுவை அழித்து விடுவித்தீர்கள். ஓ பிரபு ! எல்லா துன்பங்களையும் அழிக்க வல்லவர் தாங்களே ! மேலும் அனைத்து ஆத்மாக்களின் பரம இடமும் (வாசஸ்தலம்) நீங்களேயாவீர், பிரபு !.
+3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question