Thursday, September 19

( யதி ) பிரபுபாதா ந ஹைதெ தபே கி ஹைதெ

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

~ஸ்ரீல ஜெயபதாக ஸ்வாமி


1
( யதி ) பிரபுபாதா ந ஹைதோ தபே கி ஹைதோ
 ( எ ) ஜீவன பஹித கீசே ?
நித்தாய்-கௌரேர அபர கருணா கே திதா ஸகல தேஸே
 
2
பாஸ்சத்யேர யத பாபி துராசாரி சூன்யவாதி மாயாவாதி
தாதேர உத்தர கரிபாரே மன ஹேன கோன் தயாநிதி
 
3
ததேர நிகடே கோன் ஜன அஸி பிலய்த ஹரிநாம்
சபிய ஜீவ ரூபே கதிதே ததோ கி ஹைத அகுயான்
 
4
தேசே தேசே ஹரி – விக்ரஹ சேவா ஆரத்தி ராத்ரி – தினே
ரத யாத்ராதி மஹோத்சவ சப சிகய்தே கோன் ஐனே
 
5
சீத பாகவத சைதன்ய சரித ப்ரேமாம்ருத ரஸசார
கத ந சுந்தர சரள கரீய கே புஜ்ஹைத ஆர
 
6
கட கஷ்ட ஸஹி ப்ரீத மனே ரஹி கே வ தித ஹரிநாம்
கே தித மொதேர பூரி விருந்தாவன மாயாப்பூர மத தாம்
 
7
பரம மங்கள ஸ்ரீசைதன்ய மஹாபிரபுர சிக்ஷா தன
ஆசாரே பிரச்சாரே சதா அமாதேரே கே கரித நியோஜன
 
8
பரேம கல்பதரு நித்தாய் கௌரேர க்ருப லபிபரே
நிராவதி ஜெயபதாக ஹ்ருதய தொமாரே சரண கரே
1
ஒருவேளை ஸ்ரீல பிரபுபாதா தோன்றவில்லை என்றால் என்ன நேர்ந்திருக்கும் ? எப்படி நமது வாழ்வு சென்றிருக்கும் ? ஸ்ரீநித்யானந்த பிரபு மற்றும் ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவின் எல்லையற்ற கருணையை யார் உலகெங்கும் வழங்கியிருப்பார் ? 
 

2

மேலைநாட்டில் இருக்கும் மிக மோசமான செயல்புரிவோர் , பாவம்புரிவோர் , சூன்யவாதிகள் , மாயாவாதிகள் போன்றோரை கடைத்தேற்று வதற்கு வேறு எந்த கருணை மிகுந்த நபர் முயற்சி செய்திருப்பார் ? 
 

3

யார் வந்து இவர்களுக்கு ஹரிநாமத்தை கற்றுக் கொடுத்திருப்பார் ? யார் வந்து இவர்களை நாகரீகமானவர்களாக மாற்ற முன் வந்திருப்பார் ? 
 

4

ஆரத்தி கீர்த்தனைகளுடன் இரவும் பகலும் பகவான் ஹரியின் விக்ரஹத்தை வழிபாடு செய்ய யார் கற்று கொடுத்திருப்பார் ? ரதயாத்திரை மற்றும் விமரிசையான திருவிழாக்களை நடத்த யார் கற்றுக் கொடுத்திருப்பார் ?


5

பகவான் மேல் தூய அன்பு செலுத்தக் கூடிய நிலை எனும் பகவத் பிரேமையின் அமிர்தசாரம் பகவத்கீதை , ஸ்ரீமத் பாகவதம் மற்றும் சைதன்ய சரிதாம்ருதம் ஆகிய சாஸ்திரங்களில் பொதிந்துள்ளது. இந்த சாஸ்திரங்களை இவ்வளவு அழகாக மற்றும் தெளிவாக யார் வந்து விளக்கியிருப்பார் ? 
 

6

எல்லா கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு மகிழ்ச்சியான இதயத்துடன் யார் வந்து ஹரிநாமத்தை எடுத்துக் கொடுத்திருப்பார் ? மாயாப்பூர், விருந்தாவனம், ஜெகன்னாத்புரி போன்ற புனித ஸ்தலங்களை யார் தான் நமக்கு கொடுத்திருப்பார் ?
 

7

ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவின் போதனைகள் தான் மிகவுயர்ந்த மற்றும் மங்களகரமான பொக்கிஷமாகும் . இதை பயிற்சி செய்யவும் , பிரச்சாரம் செய்யவும் யார் தான் நம்மை ஈடுபடுத்தியிருப்பார் ? 
 

8

ஸ்ரீஸ்ரீநித்தாய் கௌரங்கரே பகவத் ப்ரேமையின் கல்பவிருக்ஷங்கள் ஆவர் . அவர்களின் கருணைத் துளியை வேண்டி ஜெயபதாகரின் இதயம், இடைவிடாது தங்களிடம் ( ஸ்ரீலபிரபுபாதாவிடம் ) அடைக்கலம் கொள்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question