Friday, September 20

ஶ்ரீ ஶ்ரீ யுகலாஷ்டகம்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

– ஸ்ரீல ஜீவகோஸ்வாமி


1
கிருஷ்ண பிரேம மயீ ராதா
ராதா பிரேம மயோ ஹரி
ஜீவனே நிதனே நித்யம்
ராதா கிருஷ்ணா கதிர் மம

2
க்ருஷ்ணஸ்ய திரவினம் ராதா .
ராதாய திரவினம் ஹரி
ஜீவனே நிதனே நித்யம்
ராதா கிருஷ்ணா கதிர் மம

3
க்ருஷ்ண ப்ராண மயீ ராதா
ராதா ப்ராண மயோ ஹரி
ஜீவனே நிதனே நித்யம்
ராதா கிருஷ்ணா கதிர் மம

4
கிருஷ்ணன த்ரவ மயீ ராதா
ராதா த்ரவ மயோ ஹரி
ஜீவனே நிதனே நித்யம்
ராதா கிருஷ்ணா கதிர் மம

5
கிருஷ்ணன கேஹே ஸிதிதா ராதா
ராதா கேஹே ஸிதிதோ ஹரி
ஜீவனே நிதனே நித்யம்
ராதா கிருஷ்ணா கதிர் மம

6
கிருஷ்ணன சித்த ஸிதிதா ராதா
ராதா சித்த ஸிதிதோ ஹரி
ஜீவனே நிதனே நித்யம்
ராதா கிருஷ்ணா கதிர் மம

7
நீலாம்பர தரா ராதா
பீதாம்பர தரோ ஹரி
ஜீவனே நிதனே நித்யம்
ராதா கிருஷ்ணா கதிர் மம

8
விருந்தாவனேஷ்வரீ ராதா
கிருஷ்ணோ விருந்தாவனேஸ்வரா
ஜீவனே நிதனே நித்யம்
ராதா கிருஷ்ணா கதிர் மம

1
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் பிரேமையில் (தூய அன்பில் ) உருவானவள் ஶ்ரீமதி ராதா ராணி மற்றும் ஶ்ரீமதி ராதா ராணியின் பிரேமையில் (தூய அன்பில்) உருவானவர் பகவான் ஶ்ரீ ஹரி(கிருஷ்ணர்). ஜீவனின் மிகப்பெரிய செல்வமான ராதா கிருஷ்ணரே எனது நித்தியமான அடைக்கலம்.
2
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மிக உயர்ந்த பொக்கிஷம் ஶ்ரீமதி ராதாராணி மற்றும் ஶ்ரீமதி ராதாராணியின் மிக உயர்ந்த பொக்கிஷம் பகவான் ஸ்ரீ ஹரி(கிருஷ்ணர்). ஜீவனின் மிகப்பெரிய செல்வமான ராதா கிருஷ்ணரே எனது நித்தியமான அடைக்கலம்.

3
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிராண சக்தி ஶ்ரீமதி ராதாராணி மற்றும் ஶ்ரீமதி ராதாராணியின் பிராண நாதன் ஸ்ரீ ஹரி(கிருஷ்ணர்). ஜீவனின் மிகப்பெரிய செல்வமான ராதா கிருஷ்ணரே எனது நித்தியமான அடைக்கலம்.

4
பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடன் முழுவதும் உருகி ஒன்றியிருப்பவள் ஶ்ரீமதி ராதாராணி மற்றும் ஶ்ரீமதி ராதாராணியுடன் முழுவதும் உருகி ஒன்றியிருப்பவர் பகவான் ஸ்ரீ ஹரி(கிருஷ்ணர்). ஜீவனின் மிகப்பெரிய செல்வமான ராதா கிருஷ்ணரே எனது நித்தியமான அடைக்கலம்.

5
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உடலில் உறைந்துள்ளவள் ஶ்ரீமதி ராதாராணி மற்றும் ஶ்ரீமதி ராதாராணியின் உடலில் உறைந்துள்ளவர் பகவான் ஸ்ரீ ஹரி(கிருஷ்ணர்). ஜீவனின் மிகப்பெரிய செல்வமான ராதா கிருஷ்ணரே எனது நித்தியமான அடைக்கலம்.

6
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இதயத்தில் எப்போதும் நிலைபெற்றிருப்பவள் ஶ்ரீமதி ராதாராணி மற்றும் ஶ்ரீமதி ராதாராணியின் இதயத்தில் எப்போதும் நிலைபெற்றிருப்பவர் பகவான் ஸ்ரீ ஹரி(கிருஷ்ணர்). ஜீவனின் மிகப்பெரிய செல்வமான ராதா கிருஷ்ணரே எனது நித்தியமான அடைக்கலம்.

7
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நீலவண்ண நிறத்தை ஒத்த உடைகளை அணிபவள் ஶ்ரீமதி ராதாராணி மற்றும் ஶ்ரீமதி ராதாராணியின் உருக்கிய பொன்னிற மேனியொத்த மஞ்சள்நிற உடைகளை அணிபவர் பகவான் ஸ்ரீ ஹரி(கிருஷ்ணர்). ஜீவனின் மிகப்பெரிய செல்வமான ராதா கிருஷ்ணரே எனது நித்தியமான அடைக்கலம்.
8
விருந்தாவனத்தின் அரசி ஶ்ரீமதி ராதாராணி மற்றும் விருந்தாவனத்தின் அரசர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். ஜீவனின் மிகப்பெரிய செல்வமான ராதா கிருஷ்ணரே எனது நித்தியமான அடைக்கலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question