Thursday, September 19

பகவத் கீதை – 6.16

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

நாத்-யஷ்னதஸ் து யோகோ
(அ)ஸ்தி ந சைகாந்தம் அனஷ்னத:
ந சாதி-ஸ்வப்ன-ஷீலஸ்ய
ஜாக்ரதோ நைவ சார்ஜுன

Synonyms:

ந — என்றுமில்லை; அதி — மிக அதிகமாக; அஷ்னத: — உண்பவனின்; து — ஆனால்; யோக — பரத்துடன் இணைவு; அஸ்தி — அமைகிறது; ந — இல்லை; ச — மேலும்; ஏகாந்தம் — எதையுமே; அனஷ்னத: — உண்ணாமல் விரதம் இருப்பவன்; ந — இல்லை; ச — மேலும்; அதி — மிக அதிகமாக; ஸ்வப்ன-ஷீலஸ்ய — உறங்குபவன்; ஜாக்ரத: — அதிகமாக விழித்திருப்பவன்; ந — இல்லை; ஏவ — என்றும்; ச — மேலும்; அர்ஜுன — அர்ஜுனா.

Translation:

அர்ஜுனா, எவனொருவன் மிக அதிகமாக அல்லது மிகக் குறைவாக உண்கின்றானோ, மிக அதிகமாக அல்லது மிகக் குறைவாக உறங்குகின்றானோ, அத்தகையோன் யோகியாவதற்கான வாய்ப்பே இல்லை.

Purport:

உணவையும் உறக்கத்தையும் ஒழுங்குபடுத்த வேண்டுமென்று இங்கு யோகிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. அதிகமாக உண்பது என்றால் ஆத்மாவையும் உடலையும் சேர்ந்து வைக்க எவ்வளவு தேவையோ அதற்கு மேல் உண்பதாகும். தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பால் போன்றவை தேவையான அளவில் கிடைப்பதால், மிருகங்களை உண்ண வேண்டிய அவசியம் மனிதனுக்கு இல்லை. பகவத்கீதையின்படி இத்தகு எளிய உணவு ஸத்வ குணமாகக் கருதப்படுகிறது. மாமிச உணவு தமோ குணத்தில் உள்ளவர்களுக்கானது. எனவே, மாமிச உணவு, மது அருந்துதல், புகைப்பிடித்தல், பகவானுக்குப் படைக்காத உணவுகளை உண்ணுதல் போன்றவற்றில் ஈடுபடுவோர், களங்கமான பொருள்களையே உண்பதால், பாவ விளைவுகளால் துன்பப்படுவர். புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசனத்-யாத்ம-காரணாத். எவனொருவன் புலனின்பத்திற்காக உண்கின்றானோ, தனக்காக சமைக்கின்றானோ, தனது உணவை கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கவில்லையோ, அத்தகையோன் பாவத்தையே உண்கின்றான். பாவத்தை உண்பவனும் தனக்காக ஒதுக்கப்பட்டதைவிட அதிகமாக உண்பவனும், யோகத்தை பக்குவமாகச் செய்ய முடியாது. கிருஷ்ணருக்கு நைவேத்யம் செய்யப்பட்ட உணவை மட்டுமே உண்பது மிகச்சிறந்ததாகும். கிருஷ்ண உணர்வில் இருப்பவன், கிருஷ்ணருக்கு முதலில் அர்ப்பணிக்கப்படாத எதையும் உண்பதில்லை. எனவே, கிருஷ்ண உணர்வினன் மட்டுமே யோகப் பயிற்சியில் பக்குவத்தை அடைய முடியும். தானே சொந்தமாக ஏற்படுத்திய விரதங்களை மேற்கொண்டு, செயற்கையான முறையில் உணவைத் துறப்பவன், யோகியாக முடியாது. கிருஷ்ண உணர்வினன், சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விரதங்களை மேற்கொள்கிறான். அவன் தேவைக்கு அதிகமாக விரதம் இருப்பதோ, உண்பதோ கிடையாது என்பதால், யோகப் பயிற்சிக்கு தகுதி வாய்ந்தவனாவான். அளவுக்கு அதிகமாக உண்பவன், உறங்கும்போது அதிகமான கனவுகளைக் காண்பான், இதனால் அவன் அளவுக்கதிகமாக உறங்க நேரிடுகிறது. தினசரி ஆறு மணி நேரத்திற்கு மேல் உறங்கக் கூடாது. இருபத்து நான்கு மணி நேரத்தில் ஆறு மணி நேரத்திற்குமேல் உறங்குபவன், நிச்சயமாக தமோ குணத்தினால் பாதிக்கப்பட்டுள்ளான். தமோ குணத்தில் இருப்பவன் சோம்பேறியாகவும் அளவு கடந்து உறங்குபவனாகவும் இருப்பான். அத்தகையோன் யோகத்தைப் பயில முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question