ஷ்ரத்தாவாங் லபதே க்ஞானம்
|தத்-பர: ஸம்யதேந்த்ரிய:
க்ஞானம் லப்த்வா பராம் ஷாந்திம்
அசிரேணாதிகச்சதி
Synonyms:
ஷ்ரத்தா-வான் — நம்பிக்கையுடையோன்; லபதே — அடைகிறான்; க்ஞானம் — ஞானம்; தத்-பர: — அதில் மிகுந்த பற்று கொண்டு; ஸம்யத — கட்டுப்படுத்தப்பட்ட; இந்த்ரிய: — புலன்கள்; க்ஞானம் — ஞானம்; லப்த்வா — அடைந்ததால்; பராம் — பரம; ஷாந்திம் — அமைதி; அசிரேண — வெகு விரைவில்; அதிகச்சதி — அடைகிறான்.
Translation:
உன்னத ஞானத்திற்காகத் தன்னை அர்ப்பணித்து புலன்களை அடக்கக்கூடிய நம்பிக்கையுடைய மனிதன், அந்த ஞானத்தை அடையத் தகுதி வாய்ந்தவனாவான். அதனை அடைந்தபின், வெகு விரைவில் பரம ஆன்மீக அமைதியை அவன் அடைகிறான்.
Purport:
கிருஷ்ண உணர்வின் ஞானம், கிருஷ்ணரின் மீது திடமான நம்பிக்கையுடைவனால் அடையப்படுகிறது. கிருஷ்ண உணர்வில் செயல்படுவதால் உயர்ந்த பக்குவத்தை அடைய முடியும் என்று எண்ணுபவன் ஷ்ரத்தாவான் (நம்பிக்கையுடையோன்) எனப்படுகிறான். இதயத்தை எல்லா பௌதிக களங்கத்திலிருந்தும் தூய்மைப்படுத்தக் கூடிய, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே / ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே எனும் மந்திரத்தை உச்சரிப்பதாலும் பக்தித் தொண்டினை பயிற்சி செய்வதாலும் இந்த நம்பிக்கை அடையப்படுகின்றது. இதுமட்டுமின்றி, புலன்களையும் கட்டுப்படுத்தியாக வேண்டும். கிருஷ்ணரின் மீது நம்பிக்கை கொண்டு புலன்களை அடக்குபவன், தாமதமின்றி கிருஷ்ண உணர்வின் ஞானத்தில் எளிதாக பக்குவத்தை அடைய முடியும்.