யதைதாம்ஸி ஸமித்தோ (அ)க்னிர்
பஸ்ம-ஸாத் குருதே (அ)ர்ஜுன
க்ஞானாக்னி: ஸர்வ-கர்மாணி
பஸ்ம-ஸாத் குருதே ததா
Synonyms:
யதா — போல; ஏதாம்ஸி — விறகு; ஸமித்த: — எரிகின்ற; அக்னி: — நெருப்பு; பஸ்ம-ஸாத் — சாம்பல்; குருதே — மாற்றுவதுக்ஷி; அர்ஜுன — அர்ஜுனா; க்ஞான-அக்னி: — ஞான நெருப்பு; ஸர்வ-கர்மாணி — பௌதிகச் செயல்களின் எல்லா விளைவுகளையும்; பஸ்ம-ஸாத் — சாம்பலாக; குருதே — அது மாற்றுகின்றது; ததா — அதுபோலவே.
Translation:
கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு விறகை சாம்பலாக்குவதைப் போல, அர்ஜுனா, ஞான நெருப்பானது ஜடச் செயல்களின் விளைவுகளை எல்லாம் சாம்பலாக்கி விடுகின்றது.
Purport:
ஆத்மா, பரமாத்மா மற்றும் இவர்களுடனான உறவு இவற்றைப் பற்றிய பக்குவமான அறிவு இங்கு நெப்பிற்கு ஒப்பிடப்படுகிறது. இந்த நெருப்பு தீயச் செயல்களின் விளைவுகளை மட்டும் எரிப்பதோடு அல்லாமல், நற்செயல்களின் விளைவுகளையும் கூட சாம்பலாக்கி விடுகின்றது. உருவாகிக் கொண்டிருக்கும் விளைவுகள், பழுத்துக் கொண்டிருக்கும் விளைவுகள், தற்போது அனுபவித்து கொண்டிருக்கும் விளைவுகள், எதிர்பார்க்கபடும் விளைவுகள் என விளைவுகளில் பல நிலைகள் உள்ளன. ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தைப் பற்றிய ஞானம் இவ்விளைவுகள் அனைத்தையும் எரித்து சாம்பலாக்கி விடுகின்றது. ஒருவன் பூரண ஞானத்தில் இருக்கும் போது, தோன்றிய விளைவுகள், தோன்றாத விளைவுகள் என எல்லாமே எரிக்கப்பட்டு விடுகின்றன. உபே உஹைவைஷ ஏதே தரத்-யம்ருத: ஸாத்-வஸாதூனீ, “செயல்களின் பாவ புண்ணியங்கள் இரண்டையும் ஒருவன் வெற்றி கொள்கிறான்” என்று வேதம் (ப்ருஹத்-ஆரண்யக உபநிஷத் 4.4.22) கூறுகின்றது.
சரியான விளக்கம் கீதை தந்தது
செய்த பாவங்களை மன்னித்து
எனக்கு கீதா உபதேசம் நல்வாழ்வு தந்தது