அபி சேத் அஸி பாபேப்ய:
ஸர்வேப்ய: பாப-க்ருத்-தம:
ஸர்வம் க்ஞான-ப்லவேனைவ
வ்ருஜினம் ஸந்தரிஷ்யஸி
Synonyms:
அபி — கூட; சேத் — ஆயின்; அஸி — நீ; பாபேப்ய: — பாவிகளில்; ஸர்வேப்ய — எல்லாரிலும்; பாப-க்ருத்-தம: — பெரும் பாவி; ஸர்வம் — அவ்வெல்லா பாவ விளைவுகளையும்; க்ஞான-ப்லவேன — உன்னதமான ஞானம் என்னும் படகால்; ஏவ — நிச்சியமாக; வ்ருஜினம் — துன்பக் கடல்; ஸந்தரிஷ்யஸி — நீ முழுதும் கடந்து விடுவாய்; .
Translation:
பாவிகளில் எல்லாம் பெரும் பாவியாக நீ கருதப்பட்டாலும் உன்னதமான ஞானமெனும் படகில் நீ நிலைபெற்றுவிட்டால், உன்னால் துன்பக் கடலைக் கடந்துவிட முடியும்.
Purport:
கிருஷ்ணருடனான ஸ்வரூப நிலையை அறிதல் மிகவும் நல்லது; ஏனெனில், அறியாமைக் கடலில் நடக்கும் வாழ்வுப் போராட்டத்திலிருந்து இஃது ஒருவனை உடனடியாக உயர்த்திவிடுகிறது. இந்த ஜடவுலகம் சில சமயம் அறியாமைக் கடலுக்கும், சில சமயம் காட்டுத் தீயிற்கும் உவமிக்கப்படுகின்றது. எவ்வளவுதான் நன்றாக நீச்சல் அறிந்தவனாயினும், கடலில் அவனது போராட்டம் கடினமானதாகும். தத்தளிக்கும் மனிதனை கடலிலிருந்து காக்க யாரேனும் முன்வந்தால், அவனே மிகச்சிறந்த காப்போனாவான். பரம புருஷ பகவானிடமிருந்து பெறப்படும் பக்குவமான ஞானமே முக்திக்கான வழி. கிருஷ்ண உணர்வு எனும் படகு மிக எளியதும் மிகச் சிறந்ததும் ஆகும்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம
ஹரே ஹரே