Wednesday, April 24

பகவத் கீதை – 3.43

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஏவம் புத்தே: பரம் புத்த்வா
ஸம்ஸ்தப் யாத்மானம் ஆத்மனா
ஜஹி ஷத்ரும் மஹா-பாஹோ
காம-ரூபம் துராஸதம்


Synonyms:
ஏவம் — இவ்வாறு; புத்தே: — புத்தியை விட; பரம் — உயர்ந்தவை; புத்த்வா — அறிந்து; ஸம்ஸ்தப்ய — நிலைநிறுத்தி; ஆத்மானம் — மனம்; ஆத்மனா — தெளிவான புத்தியினால்; ஜஹி — வெற்றிக்கொள்; ஷத்ரும் — எதிரி; மஹா-பாஹோ — பலம் பொருந்திய புயங்களை உடையோனே; காம-ரூபம் — காமத்தின் உருவிலுள்ள; துராஸதம் — வெல்ல முடியாத.


Translation:
இவ்வாறாக, ஜடப் புலன்கள், மனம், புத்தி ஆகியவற்றை விட உயர்ந்தவனாக தன்னை உணர்ந்து, பலம் பொருந்திய புயங்களை உடைய அர்ஜுனா, தெளிவான ஆன்மீக புத்தியினால் (கிருஷ்ண உணர்வினால்) மனதை உறுதிப்படுத்தி, காமம் எனப்படும் திருப்திப்படுத்த முடியாத எதிரியை ஆன்மீக பலத்தினால் வெற்றிக் கொள்ள வேண்டும்.


Purport:
கீதையின் இந்த மூன்றாம் அத்தியாயம், உருவற்ற சூன்யத்தை இறுதி இலட்சியமாகக் கொள்ளாமல், தான் பரம புருஷ பகவானுடைய நித்தியத் தொண்டன் என்பதை அறியும் கிருஷ்ண உணர்வினை முடிவாகச் சுட்டிக் காட்டுகிறது. பௌதிக வாழ்வில், காம உந்துதல்களாலும் ஜட இயற்க்கையின் வளங்களை அடக்கியாளும் ஆசையாலும் ஒருவன் நிச்சயமாக வசப்படுத்துகிறான். அதிகாரத் தன்மைக்கான ஆசைகளும் புலனுகர்ச்சிக்கான ஆசைகளும் கட்டுண்ட ஆத்மாவின் பரம எதிரிகளாகும்; ஆனால், கிருஷ்ண உணர்வின் பலத்தால், ஜடப் புலன்கள், மனம், புத்தி ஆகியவற்றை கட்டுப்படுத்த முடியும். தொழிலையும் விதிக்கப்பட்ட கடமைகளையும் திடீரென விட்டுவிடத் தேவையில்லை; மாறாக, படிப்படியாக கிருஷ்ண உணர்வை அபிவிருத்தி செய்துகொள்வதன் மூலம், தனது ஸ்வரூபத்தை நோக்கிச் செலுத்தப்படும் ஸ்திரமான புத்தியினால், பௌதிகப் புலன்களாலும் மனதாலும் பாதிக்கப்படாத திவ்யமான தளத்தில் நிலைபெற முடியும். இதுவே இந்த அத்தியாயத்தின் சாரமாகும். பக்குவமற்ற ஜட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுள்ள நிலையில், தத்துவக் கற்பனையோ, (பெயரளவிலான யோகாசன பயிற்சிகளைக் கொண்டு) புலன்களைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்கையான முயற்சியோ, ஆன்மீக வாழ்வில் மனிதனுக்கு ஒரு போதும் உதவ முடியாது. உயர்ந்த புத்தியைக் கொண்டு அவன் கிருஷ்ண உணர்வில் பயிற்சி பெற வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question