Thursday, September 19

பகவத் கீதை – 3.20

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

Translation:
ஜனகரைப் போன்ற மன்னர்களும் நியமிக்கப்பட்ட கடமைகளைச் செய்ததன் மூலமாகவே பக்குவமடைந்தனர். எனவே, பொது மக்களுக்கு அறிவூட்டுவதற்காகவாவது நீ உன்னுடையகடமையைச் செய்தாக வேண்டும்.


Purport:
ஜனகரைப் போன்ற மன்னர்கள் தன்னுணர்வு பெற்ற ஆத்மாக்கள். எனவே, வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளைச் செயலாற்ற வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. இருப்பினும், பொது மக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கும் பொருட்டு அவர்களும் தங்களது கடமைகளைச் செய்தனர். ஜனகர், சீதையின் தந்தையும் பகவான் ஸ்ரீ இராமரின் மாமனாருமாவார். பகவானின் பெரும் பக்தர் என்பதால், அவர் திவ்யமான நிலையில் வீற்றிருந்தார். ஆனால் மிதிலையின் (இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஓர் உட்பிரிவு) மன்னராக இருந்ததால், விதிக்கப்பட்ட கடமைகளை செயலாற்றுவது எப்படி என்பதைத் தனது குடிமக்களுக்குக் கற்றுத்தர வேண்டியிருந்தது. பகவான் கிருஷ்ணருக்கும் அவரது நித்திய நண்பனான அர்ஜுனனுக்கும் குருக்ஷேத்திர போர்க்களத்தில் போரிடுவதற்கான எந்தவொரு தேவையும் இல்லை. இருப்பினும், நல்ல பேச்சு வார்த்தைகள் தோல்வியுறும் போது போர் அவசியமானது என்பதை மக்களுக்குக் கற்பிப்பதற்காக, அவர்கள் போரிட்டனர். குருக்ஷேத்திர யுத்ததிற்கு முன், போரைத் தவிப்பதற்கான எல்லாவித முயற்சிகளும் (பரம புருஷ பகவானாலும்) மேற்கொள்ளப்பட்டன. ஆனால், எதிர் தரப்பினர் போரிடுவதில் உறுதியுடன் இருந்தனர். எனவே, இதுபோன்ற நேர்மையான காரணத்திற்காக போரிடுவது அவசியமானதாகும். கிருஷ்ண உணர்வில் நிலைபெற்றவனுக்கு உலகில் எவ்வித விருப்பமும் இல்லாத போதும், பொது மக்கள் எவ்வாறு வாழ வேண்டும், எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்பதை அறிவுறுத்தும் நோக்கத்தோடு அவன் தொடர்ந்து செயலாற்றுகிறான். கிருஷ்ண உணர்வில் அனுபவம் பெற்றவர்கள், மக்கள் தங்களைப் பின்பற்றும் விதத்தில் செயலாற்ற முடியும். இதைப் பின்வரும் பதம் விளக்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question