Thursday, March 28

பகவத் கீதை – 18.39

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

யத் , அக் ரே சானுப ந்தே , ச
ஸுகம் மோஹனம் ஆத்மன :
நித் ராலஸ்ய -ப்ரமாதோத்தம்
தத் தாமஸம் உதா ஹ்ருதம்

யத்- எது : அக்ரே – ஆரம்பத்தில் ; ச – மேலும் ; அனுபந்தே – இறுதியில் ; ச – கூட ; ஸுகம் – சுகம் ; மோஹனம் – மயக்கம் ; ஆத்மன : – ஆத்மாவின் ; நித் ரா – உறக்கம் ; ஆலஸ்ய – சோம்பேறித்தனம் ; ப்ரமாத – மயக்கம் ; உத்தம் – ஆகியவற்றால் உண்டாக்கப்பட்ட ; தத் – அந்த ; தாமஸம் – தமோ குணத்தில் ; உதா ஹ்ருதம் – இருப்பதாகக் கூறப்படுகின்றது .

தன்னுணர்வைக் காண இயலாத , ஆரம்பம் முதல் இறுதி வரை மயக்கமாக இருக்கின்ற , உறக்கம் , சோம்பல் , மற்றும் மாயையினால் வருகின்ற சுகம் , தமோ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

பொருளுரை : சோம்பல் மற்றும் உறக்கத்தில் இன்பம் காண்பவனும் , எவ்வாறு செயல்படுவது , எவ்வாறு செயல்படக் கூடாது என்பதைப் பற்றிய அறிவில்லாதவனும் , நிச்சயமாக தமோ குணத்தில் இருக்கின்றான் . தமோ குணத்தில் இருப்பவனுக்கு எல்லாமே மயக்கம்தான் . ஆரம்பத்திலோ இறுதியிலோ அவனுக்கு சுகம் கிடையாது . ரஜோ குணத்தில் இருப்பவன் , ஆரம்பத்தில் ஒரு வித அற்ப சுகத்தையும் இறுதியில் துயரத்தையும் அடைகிறான் ; ஆனால் தமோ குணத்தில் இருப்பவனுக்கோ ஆரம்பத்திலும் சரி , இறுதியிலும் சரி , துன்பம் மட்டுமே .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question