Wednesday, December 4

பகவத் கீதை – 11.50

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஸஞ்ஜய உவாச
இத்-யர்ஜுனம் வாஸுதேவஸ் ததோக்த்வா
ஸ்வகம் ரூபம் தர்ஷயம் ஆஸ பூய:
ஆஷ்வாஸயாம் ஆஸ ச பீதம் ஏனம்
பூத்வா புன: ஸெளம்ய-வபுர் மஹாத்மா

வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்
ஸஞ்ஜய: உவாச—சஞ்ஜயன் கூறினான்; இதி—இவ்வாறு; அர்ஜுனம்—அர்ஜுனனிடம்; வாஸுதேவ:—கிருஷ்ணர்; ததா—இவ்விதமாக; உக்த்வா—கூறிக்கொண்டு; ஸ்வகம்—தமது சுய; ரூபம்—உருவம்; தர்ஷயம் ஆஸ—காட்டினார்; பூய:—மீண்டும்; ஆஷ்வாஸயம் ஆஸ—உற்சாகப்படுத்தினார்; ச—மேலும்; பீதம்—அச்சமுற்று இருந்த; ஏனம்—அவனை; பூத்வா-ஆகி; புன:—மீண்டும்; ஸெளம்ய வபு:—அழகிய உருவம்; மஹா–ஆத்மா—மிகச் சிறந்தவர்.

மொழிபெயர்ப்பு
திருதராஷ்டிரரிடம் சஞ்ஜயன் கூறினான்: புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கிருஷ்ணர், அர்ஜுனனிடம் இவ்வாறு பேசிய பிறகு, நான்கு கரங்களை உடைய தனது சுய உருவையும் இறுதியில் இரண்டு கரங்களுடனான உருவையும் காட்டி, அச்சமுற்று இருந்த அர்ஜுனனை உற்சாகப்படுத்தினார்.

பொருளுரை
வசுதேவருக்கும் தேவகிக்கும் மைந்தனாக கிருஷ்ணர் தோன்றியபொழுது, முதலில் அவர் நான்கு கரங்களுடைய நாராயணராகத் தோன்றினார். ஆனால் அவர் தனது பெற்றோரால் வேண்டிக் கொள்ளப்பட்ட போது, தன்னை சாதாரணக் குழந்தையைப் போன்று மாற்றிக் கொண்டார். அது போலவே, நான்கு கரங்களையுடைய ரூபத்தைக் காண்பதில் அர்ஜுனனுக்கு விருப்பம் இருக்காது என்பதை கிருஷ்ணர் அறிவார், இருப்பினும் நான்கு கரங்களையுடைய அத்தகு உருவத்தைக் காட்டும்படி அர்ஜுனன் வேண்டியதன் காரணத்தால், கிருஷ்ணர் அந்த உருவத்தை மீண்டும் காட்டி இறுதியில் தனது இரு கரங்களையுடைய உருவத்தைக் காட்டினார். ஸெளம்ய-வபு: எனும் சொல் மிகவும் முக்கியமானதாகும். ஸெளம்ய-வபு: என்றால் மிகவும் அழகிய உருவம் என்று பொருள்; இந்த உருவமே அழகில் மிகச்சிறந்ததாகும். கிருஷ்ணர் இவ்வுலகில் இருந்த போது, அவரது அழகிய உருவினால் அனைவரும் எளிமையாகக் கவரப்பட்டனர். மேலும், கிருஷ்ணரே அகிலத்தின் இயக்குநர் என்பதால் தனது பக்தனான அர்ஜுனனின் பயத்தை அறவே ஒழித்து, மீண்டும் தனது அழகான கிருஷ்ண உருவத்தைக் காட்டினார். பிரம்ம சம்ஹிதையில் (5.38) கூறப்பட்டுள்ளது, ப்ரேமாஞ்ஜன-ச்சுரித–பக்தி-விலோசனேன—எவருடைய கண்கள் பிரேமை எனும் மையினால் அலங்கரிக்கப்பட்டுள்ளதோ, அத்தகைய நபர்களே ஸ்ரீ கிருஷ்ணரின் அழகிய உருவினைக் காண முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question