இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻
பௌர்ணமி அல்லது அமாவாசையையடுத்த 11-ம் நாளே ஏகாதசியாகும். நவீன அறிவியலின்படி, காற்றழுத்தமானது, அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் மிகவும் மாறுபடுகிறது. இதை நாம், கடலலைகளின் சீற்றத்தை வைத்து உணர்ந்துகொள்ளலாம். இதனடிப்படையில், ஏகாதசி விரதத்தின் முக்கியத்துவத்தை இருவகைகளில் விளக்கிகூறலாம்:
- அறிவியலின்படி, நாம் உண்ணும் உணவு 2-3 நாட்களுக்குப் பிறகு மூளையைச்சென்றடைகிறது. நாம் ஏகாதசியன்று உண்ணும் உணவு, பௌர்ணமி அல்லது அமாவாசையன்று மூளையைச் சென்றடைகிறது – மிக அதிகமான காற்றழுத்தம், நம்முடைய மனஓட்டம் உள்ளிட்ட பலவற்றில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துவதால், நம் மூளை, ஏறுமாறாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- குறைந்த காற்றழுத்தமுள்ள ஏகாதசியன்று விரதமிருப்பது, நம்முடைய ஜீரணமண்டலத்தை சுத்தமாக்குகிறது. காற்றழுத்தம் அதிகமாகவுள்ள மற்ற நாட்களில் விரதமிருப்பது, நம்முடைய ஜீரண உறுப்புகளைப் பாதிக்கலாம்.
ஆக, மேற்கண்ட இரு விஷயங்களும், ஏகாதசியன்று விரதமிருப்பதன் அவசியத்தை உணர்த்துகின்றன.
+10
Nice