Saturday, July 27

Tag: vaishnavas

Srila Bhaktivinoda Thakura (Tamil) Iஸ்ரீல பக்திவினோத தாகுரர்

Srila Bhaktivinoda Thakura (Tamil) Iஸ்ரீல பக்திவினோத தாகுரர்

வாழ்க்கை வரலாறு
பக்திவினோத தாகுர் தன் வாழ்நாள் முழுவதையும் முழுமுதற் கடவுளான கிருஷ்ணருக்கு இடைவிடாது தொண்டு செய்வதில் கழித்தார். இவ்வுலகிற்கு நன்மை பயக்க அவர் ஆற்றிய நற்தொண்டானது ஸ்ரீ சைதன்யர் மற்றும் கோஸ்வாமிகளின் அளவற்ற செயலுக்கு ஒப்பானதாகும். இந்த தனி ஒருவரின் ஆன்மீக முயற்சியும் தெய்வீக எழுத்துகளும் பகவான் சைதன்யரின் உபதேசங்களை படித்தவர்களும் அறிவாளிகளும் ஏற்றுக்கொள்ளும்படி செய்தது.சைதன்ய மஹாபிரபுவின் ஆழ்ந்த, உயர்ந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட வைஷ்ணவ சம்பிரதாயம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு எந்த அளவு சீர்குலைந்து இருந்தது என்பதை நம்மால் எண்ணிப் பார்க்க இயலாது. சைதன்ய மஹாபிரபுவின் தத்துவங்கள் மிகவும் ஆழமானவை, கற்றறிந்த பண்டிதர்களாலும் அதன் ஆழத்தை உணர முடியாது. இருப்பினும், பண்பாடற்ற மனிதர்களின் அறியாமையின் காரணத்தினால், அவரது உயர்ந்த வைஷ்ணவ சம்பிரதாயம் சீர்குலைந்து காணப்பட்டது. வேதங்கள்,...

Kolavecha Sridhar (Tamil) / கோலாவேசா ஸ்ரீதர்

வாழ்க்கை வரலாறு, ஆன்மீகப் பதிவு
கோலாவேசா ஸ்ரீதர்__________________________________ஸ்ரீதரர் மிகவும் ஏழ்மையான பிராமணர், தொன்னைகளைச் செய்வதற்கான வாழை மரப்பட்டைகளை விற்று வாழ்ந்து வந்தார். பெரும்பாலும் அவருக்கு ஒரு வாழைத் தோட்டம் இருந்திருக்கலாம்; அதிலிருந்து இலைகள், பட்டைகள் மற்றும் பழங்களைச் சேகரித்து தினமும் சந்தையில் விற்று வந்தார். தமது வருமானத்தில் பாதியினை அவர் கங்கையை வழிபடுவதில் செலவிட்டார், மீதியினை வாழ்வாதாரத்திற்காக உபயோகித்தார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காஜியினை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியபோது, ஸ்ரீதரர் குதூகலத்தினால் ஆடினார். அவருடைய கமண்டலத்திலிருந்து மஹாபிரபு நீர் அருந்துவது வழக்கம். சைதன்யர் சந்நியாசம் ஏற்பதற்கு முன்பாக ஸ்ரீதரர் ஸச்சி தேவியிடம் பகவானுக்குச் சமைப்பதற்காக கீரை வழங்கினார். ஆண்டுதோறும் அவர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவைக் காண்பதற்காக ஜகந்நாத புரிக்குச் சென்றார். கவி-கர்ணபூரரின் கருத்து ...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question