Krishna & Balarama went to Vrindavan (Tamil) / கிருஷ்ண, பலராமரின் பிருந்தாவன விஜயம்
யாதவர்களும், வேறு பல அரசர்களும் ஒரு சூரிய கிரகணத்தின் போது குருட்சேத்திரத்தில் சந்தித்ததையும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய விஷயங்களை விவாதித்ததையும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது. கிருஷ்ணர் தந்த மகாராஜனையும், மற்ற பிருந்தாவன வாசிகளையும் குருட்சேத்திரத்தில் சந்தித்து அவர்களை மகிழ்வித்ததையும் இது விவரிக்கிறது. முழு சூரிய கிரகணம் நிகழப்போவதை அறிந்து யாதவர்கள் உட்பட்ட பாரத-வர்ஷ மக்கள், விசேஷ புண்ணிய பலன்களைப் பெற குருட்சேத்திரத்தில் திரண்டனர். யாதவர்கள் நீராடி மற்ற கிரியைகளையும் நிறைவேற்றியபின், மத்ஸ்யம், உசீனரம் முதலான தேசத்தரசர்களும் அங்கு வந்திருப்பதைக் கண்டனர். மேலும், எப்பொழுதும் கிருஷ்ணரின் ஆழ்ந்த பிரிவுத் துயரை அனுபவித்துக் கொண்டிருக்கும் நந்த மகாராஜனும், மற்ற விரஜ வாசிகளும்கூட வந்திருப்பதைக் கண்டனர். இப்பழைய நண்பர்களையெல்லாம் கண்டு பெருமகிழ்ச்சியடைந்த யாதவர்கள், அவர்க...