Varuthini Ekadashi (Tamil) / வருத்தினி ஏகாதசி
ஏப்ரல் / மே மாதங்களில் தேய்பிறையில் தோன்றக்கூடிய வருத்தினி ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பவிஸ்யோத்தர புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை மகாராஜா யுதிஸ்ட்டிரர் பகவான் கிருஷ்ணரிடம் கூறினார். ஓ! வாசுதேவா, எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன். தயவுசெய்து (ஏப்ரல்/மே) மாதங்களின் தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயரையும் அதன் பெருமைகளை பற்றியும் எனக்கு விளக்குங்கள்.பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார் என தருமை மன்னா, இந்த ஏகாதசியின் பெயர் வருத்தினி. இது ஒருவருக்கு இந்த வாழ்க்கையிலும் அதற்கு பிறகும் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால் ஒரு ஜீவன் தன் பாவ விளைவுகளை குறைத்துக்கொண்டு, நிரந்தரமான ஆனந்தத்தை அடைந்து மிகுந்த பாக்கியசாலி ஆகி...