Srila Gopala Bhatta Goswami (Tamil) ஸ்ரீ கோபால பட்ட கோஸ்வாமி
ஸ்ரீ கோபால பட்ட கோஸ்வாமி ( வேன்கட பட்டாவின் மகன், ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்) தென்னிந்தியாவின் ஸ்ரீ ரங்கத்தில் தோன்றினார். ஸ்ரீ சைதன்யா மஹாபிரபு வேன்கட பட்டாவின் வீட்டில் நான்கு மாதங்கள் தங்கியிருந்து, குடும்பத்தை கெளடிய வைணவத்திற்கு மாற்றினார். இந்த நேரத்தில் சிறு பாலகனாக கோபால தனிப்பட்ட முறையில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவுக்கு சேவை செய்தார். ஸ்ரீ சைதன்யர் அவரின் எச்சங்களையும் ஆசீர்வாதங்களையும் அன்பாகக் கொடுத்து அவரை ஆச்சார்யாவாக மாற்றினார். நான்கு மாதத்தில், சைதன்யா மஹாபிரபு வேன்கட பட்டாவுடன் நெருங்கிய நட்பை வளர்த்துக் கொண்டார், இதை கிருஷ்ணா தாஸ கவிராஜர் "ஷக்ய ரஸா" என்று விவரிக்கிறார். ஒருவருக்கொருவர் சுதந்திரமாக உரையாடுகையில், அவர்கள் பெரும்பாலும் ஒன்றாக சிரிப்பார்கள், கேலி செய்வார்கள். ஒரு நாள் நகைச்சுவையான மனநிலையில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு வேன்கடாவிடம் கேட்ட...