Pandava Nirjala Ekadasi (Tamil)
பாண்டவ நிர்ஜல ஏகாதசிhttps://youtu.be/f29gorKkcgoஆனி மாதம், சுக்ல பட்சம், ஏகாதசி திதியை நிர்ஜலா ஏகாதசியாக கொண்டாடுவர்.. பாண்டவ நிர்ஜலா ஏகாதசியின் விரத மகிமையை நாம் காண்போம். 80 ஆயிரம் ரிஷிகளும், முனிவர்களும் மிகவும் விநயத்துடன் சுவாரசியமான, பாபங்களை அழிக்கும் ஏகாதசி விரதக் கதைகளை கேட்டு மிகுந்த மனமகிழ்ச்சியில் திளைத்து இருந்தார்கள். அப்போது அனைவரும் வைகாசி -ஆனி மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியின் கதையைக் கேட்க விருப்பம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சூத முனிவர் அதைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்."ஒரு முறை பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமசேனர் வியாசரிடம் 'மதிப்பிற்குரிய பிதாமகரே ! மூத்த தமையனார் யுதிஷ்டிரர், அன்னை குந்தி, திரௌபதி, தம்பி அர்ஜூன், நகுலன், சகா தேவன் ஆகியோர் ஏகாதசி விரதத்தை நியமத்துடன் கடைபிடித்து வருகிறார்கள். அதனால் அவர்கள், நானும் அன்று அன்னம் உட்கொள்ளக் கூட...