மனதின் செயல்
மனமானது சூட்சம அல்லது லிங்க உடல் என்று சொல்லப்படுகின்றது . பதினேழு மூலகங்கள் கொண்டவை. ஐந்து ஞானப்புலன்கள் , ஐந்து செயற்புலன்கள் , ஐந்து விதகாற்று ( ப்ராண , அபான , வ்யான , சமான , உதான ) மற்றும் மனம் , அறிவு ஆகும். மனம்தான் உட்புறத்தில் விஷயங்களை முடிவு செய்து இயங்க வேண்டிய முறைகளையும் நிர்ணயிக்கின்றது. ஞானப்புலன்களினால் கண்கள் வெளிப்புறப் பொருட்களைக் காண்கின்றது. மனம் அந்தப் பொருளின் விவரங்களைக் கண்களுக்கு சமர்ப்பிக்கின்றது. பின்பு அதே மனம் பார்க்கத் தகுந்தவைகளையும் தகாதவைகளையும் முடிவு செய்கின்றது. மனதிலிருந்து கிடைத்த தகவல்களை இப்பொழுது அறிவு ஏற்கின்றது.அறிவு இப்போது தனது ஆன்ம உணர்வின்படி முடிவு செய்கின்றது . பரமாத்மா முடிவு செய்யும் விதம் ஆத்மாவைப் பொறுத்துள்ளது . ஆத்மா முடிவு செய்யும் விதம் அறிவை பொறுத்துள்ளது . அறிவு முடிவு செய்யும் விதம் மனதைப் ...