Saturday, July 27

Prayers Of Prithu Maharaj (Tamil) / பிருது மகாராஜனின் பிரார்த்தனைகள்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஸ்ரீமத்-பாகவதம்
காண்டம் 4 / அத்தியாயம் 20 / பதம் 23-31


பதம் 23

ப்ருதுர் உவாச

வரான் விபோ த்வத் வரதேஷ்வராத் புத:
கதம் வ்ருணீதே குண – விக்ரியாத்மநாம்
யே நாரகாணாம் அபி ஸந்தி தேஹிநாம்
தான் ஈஸ கைவல்ய – பதே வ்ருணே ந ச

மொழிபெயர்ப்பு

வரம் அருளும் தேவர்களுக்குள்ளே நீயே சிறந்தவர். எனவே கற்றறிந்த அறிஞன் ஏன் இயற்கையின் குணங்களினால் குழப்பமும் உயிர்களுக்குரிய வரங்களை உம்மிடம் கேட்க வேண்டும்? நரகத்தின் கொடுமைகளைத் தங்கள் வாழ்வில் அனுபவிக்கும் உயிர்களுக்குக் கூட அவ்வரங்கள் தாமாகவே கிடைக்கின்றன. எனது அன்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய பகவானே உமது தோற்றத்துடன் நான் இணைவதற்கு அருள நிச்சயம் உம்மால் முடியும். ஆனாலும் அப்படிப்பட்ட வரத்தினைப் பெறுவதற்குக் கூட நான் விரும்புவதில்லை.

பதம் 24

ந காமயே நாத தத் அபி அஹம் க்வசின்
ந யத்ர யுஷ்மச் – சரணாம்புஜாஸவ:
மஹத்தமாந்தர் – ஹ்ருதயான் முக – ச்யுதோ
விதத்ஸ்வ கர்ணாயுதம் ஏஷ மே வர:

மொழிபெயர்ப்பு

எனது அன்பிற்கினிய பகவானே, உமது திருவடித் தாமரை என்னும் மலரிலிருந்து வரும் அமிர்த மது இல்லாத வரமான உமது தோற்றத்துடன் இணைகின்ற வரத்தினைப் பெறுவதற்கு ஒருபோதும் நான் விரும்பமாட்டேன். நான் வேண்டும் வரம் என்பதெல்லாம் உமது பக்தர்களின் வாயிலிருந்தும் வரும் உமது பெருமைகளைக் கேட்பதற்கும் பத்து லட்சம் காதுகள் வேண்டும் என்பதே.

பதம் 25

ஸ உத்தமஸ்லோக மஹன் – முக – ச்யுதோ
பவத் – பதாம்போஜ ஸீதா கணாநில:
ஸ்ம்ருதிம் புனர் விஸ்ம்ருத – தத்த்வ – வர்த் மனாம்
குயோகினாம் நோ விதரதி அலம் வரை:

மொழிபெயர்ப்பு

மிக உயர்ந்த மனிதர்களின் சிறந்த பாடல்களினால் நீர் பெருமைப்படுத்தப்படுகின்றீர்! உமது பாத கமலத்தின் அப்பெருமைகள் எல்லாம் மகரந்தத் துகள்களைப் போன்றவையாகும். உமது கமல பாதத்தின் மகரந்தத்தூளின் நறுமணத்தை மிகச் சிறந்த பக்தர்களின் நாவிலிருந்து புறப்படும் தெய்வீக ஒலி சுமந்து வரும் பொழுது தனது உண்மை நிலையினை மறந்து போயிருக்கும் உயிர்வாழி மெல்ல மெல்ல உம்மோடு கொண்டிருந்த நித்திய உறவினை நினைவு கூர்கிறான். பக்தர்கள் இவ்விதம் வாழ்வின் உண்மை மதிப்புப் பற்றிய சரியான முடிவிற்குப் படிப்படியான வருகின்றனர். எனது அன்பிற்கினிய இறைவனே உமது புகழினை உமது உண்மையான பக்தனது நாவிலிருந்து கேட்கின்ற பாக்கியத்தைத்தவிர வேறெந்த வரமும் நான் வேண்டேன்.

பதம் 26

யஸ: ஸிவம் ஸீஸ்ரவ ஆர்ய – ஸங்கமே
யத்ருச்சயா சோபஸ்ருணோதி தே ஸக்ருத்
கதம் குண – ஜ்ஞோ விரமேத் விநா பஸீம்
ஸ்ரீர் யத் ப்ரவவ்ரே குண – ஸங்ரஹேச்சயா

மொழிபெயர்ப்பு

எனது வணக்கத்திற்குரிய உயர்ந்த பெருமையுடைய பகவானே, தூய பக்தர்களோடு உறவுகொண்டு ஒருவன் உமது செயல்களின் பெருமைகளைப் பற்றி ஒரு முறை கேட்பான் என்றால் அவன் ஒரு விலங்காக இல்லாதிருக்கும் பட்சத்தில், அப்பக்தர்களின் உறவினை எக்காரணம் கொண்டும் விட்டுவிட மாட்டான், புத்திமான் அவர்களது உறவினைக் கைவிட அக்கறை கொள்ளமாட்டான். உமது திருப்புகழை ஓதுவதும், கேட்பதும், அதிர்ஷ்ட தேவதையினால் கூட ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. அத்தேவதை உமது அளவற்ற லீலைகளையும், உன்னதமான பெருமைகளையும் கேட்கவே விரும்புகின்றாள்.

பதம் 27

அதாபஜே த்வாகில – பூருஷோத்தமம்
குணாலயம் பத்ம – கரேவ வாலஸ:
அபி ஆவயோர் ஏக – பதி – ஸ்ப்ருதோ: கலிர்
ந ஸ்யாத் க்ருத – த்வச் – சரணைக தானயோ:

மொழிபெயர்ப்பு

நான் இப்பொழுது முழுமுதற் கடவுளின் திருவடித் தாமரையினிடத்து, கையில் தாமரை மலருடன் இருக்கின்ற அதிர்ஷ்ட தேவதை செய்யும் பணியினைப் போல் என்னையும் அப்பணியில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால் நமது மேன்மைக்குரிய முழுமுதற் கடவுள், எல்லாத் தெய்வீகத் தன்மைகளையும் தன்னிடத்தே கொண்ட உறைவிடமாவார். நானும் அதிர்ஷ்ட தேவதையும் ஒரே பணியில் ஈடுபட்டிருப்பதினால் எங்களுக்குள் சண்டை வருமோ என நான் அஞ்சுகிறேன்.

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question