Saturday, July 27

Prayers Of Dhruva Maharaj (Tamil) / துருவ மகாராஜனின் பிரார்த்தனைகள்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஸ்ரீமத்-பாகவதம்
காண்டம் 4 / அத்தியாயம் 9 / பதம் 6-17

பதம் 6

துருவ உவாச

யோ ‘நந்த: ப்ரலிஸ்ய மம வாசம் சிமார் ப்ரஸீதாம்
ஸஞ்ஜீவயதி அகில – ஸக்தி – தர: ஸ்வ தாம்னா
அன்யாம்ஸ் ச ஹஸ்த – சரண – ஸ்ரவண – த்வக் – ஆதீன்
ப்ராணான் நமோ பகவதே புருஷாய துப்யம்

மொழிபெயர்ப்பு

துருவ மன்னர் கூறினார்: போற்றுதலுக்குரிய பகவானே! நீர் அனைத்து சக்திகளும் வாய்க்கப் பெற்றவர். நீர் என்னுள்ளே புகுந்து உமது கரங்களையும், கால்களையும், செவிகளையும், தொடும் உணர்வினையும், உயிர்ச்சக்தியினையும் குறிப்பாக எனது பேசும் சக்தியினையும் உயிர்ப்பித்தீர். எனது மரியாதைக்குரிய வழிபாடுகளை உமக்குச் செலுத்துதற்கு அருள்புரிவீராக.

பதம் 7

ஏனஸ் த்வம் பகவன்ன கிதம் ஆத்ம – ஸக்த்யா
மாயாக்யயோரு – குணயா மஹத் – ஆதி – அஸேஷம்
ஸருஷ்ட்வானுவிஸ்ய புருஷஸ் – தத் – அஸத் – குணேஷீ
நானேவ தாருஷீ விபாவஸீவத் விபாஸி

மொழிபெயர்ப்பு

போற்றுதலுக்குரிய பகவானே! நீரே பரம்பொருள், ஆனால் உமது பல்வேறு வகைச் சக்திகளினால் நீர் ஆன்மீக மற்றும் இன்றைய உலகங்களின் வேறு வேறாகத் தோன்றுகின்றீர். நீர் உமது புறச் சக்தியினால் இப்பௌதீக உலகின் முழுச்சக்தியை படைக்கிறீர். அதன்பிறகு உலகினுள் நீர் பரமாத்மாவாக நுழைகின்றீர். நீரே பரமபுருஷர்; மேலும் நீர் இயற்கையின் தற்காலிக குணங்களினால், நெருப்பு பல்வேறு வடிவுடைய விறகுகளில் எரியும்பொழுது பல்வேறு வகையாகத் தோன்றுகிறதோ அதுபோல் நீவிரும் பல்வேறு வகையாகத் தோற்றங்களைப் படைக்கின்றீர்.

பதம் 8

த்வத் – தத்தயா வயுனயேதம் அசஷ்ட விஸ்வம்
ஸீப்த – ப்ரபுத்த இவ நாத பவத் ப்ரபன்ன:
தஸ்யாபவர்க்ய – ஸரணம் தவ பாத – மூலம்
விஸ்மர்யதே க்ருத – விதா கதம் ஆர்த – பந்தோ

மொழிபெயர்ப்பு

ஓ நாதரே, பிரம்ம தேவன் முற்றிலும் உம்மையே சரணடைந்திருக்கின்றார். ஆரம்பத்தில் நீர் அவருக்கு அருளிய ஞானத்தினாலேயே ஒருவன் எவ்வாறு உறக்கத்தினின்று எழுந்தவுடன் தனது காலைக் கடமைகளைப் பற்றி நினைப்பானோ அது போன்ற அவரால் இப்பிரபஞ்சத்தினைப் பார்க்கவும் புரிந்து கொள்ளவும் முடிந்தது, விடுதலையினை விரும்பும் மனிதர்களுக்கு நீரே அடைக்கலமாகவும், வருந்துவோர்களுக்கு நீரே நண்பராகவும் விளங்குகின்றீர். அவ்வாறிருக்க நிறைந்த மதியுடைய அறிஞனால் எவ்வாறு உம்மை மறக்க இயலும்?

பதம் 9

நூனம் விமுஷ்ட – மதயஸ் தவ மாயயா தே
யே த்வாம் பவாப்யய – விமோக்ஷணம் அன்ய ஹேதோ:
அர்அந்தி கல்பக – தரும் குணபோபபோக்யம்
இச்ந்தியத் ஸ்பர்ஸஜம் நிரயே (அ)பி நீர்ணாம்

மொழிபெயர்ப்பு

இத்தோல் பொதியின் புலனுகர்ச்சிகளுக்காக உம்மை வழிபடுபவர்கள், நிச்சயம் உமது மாயா சக்தியினால் பாதிக்கப்பட்டவர்களே ஆவர். விரும்பியதைத் தரும் கற்பக விரும்சம் போன்றவரும், பிறப்பு இறப்பிலிருந்து விடுவிப்பவருமாகிய உம்மை அடைவதற்குப் பதிலாக, மூடர்கள், நரகத்தில் உழலும் வாழ்க்கை நிலை பெற்றவர்களுக்கும் கிடைப்பதான புலனுகர்ச்சிகளுக்குரிய வரங்களை உம்மிடம் இருந்து பெற விரும்புகின்றனர்.

பதம் 10

யாநிர்வ்ருதிஸ் தனு – ப்ருதாம் தவ பாத – பத்ம –
த்யானாத் பவஜ் – ஜன – கதா – ஸ்ரவணேன வா ஸ்யாத்
ஸா ப்ரஹ்மணி ஸ்வ – மஹிமனி அபி நாத மா பூத்
கிம் த்வ அந்தகாஸி – லுவிதார் பததாம் விமானாத்

மொழிபெயர்ப்பு

வழிபாட்டுக்கும் போற்றுதலுக்கும் உரிய பகவானே, உமது திருவடித் தாமரைகளை தியானிப்பதினாலும் தூய பக்தர்களிடமிருந்து உமது புகழினைக் கேட்பதினாலும் பெறும் அளவற்ற மகிழ்ச்சியானது பரம்பொருளான அருவமான பிரம்மத்துடன் ஒருவன் இணைவதினால் பெறும் தேவசுகத்தினை விட மிகவுயர்ந்ததாகும். அப்பிரம்மானந்தமும் பக்தித் தொண்டிலிருந்து பெறும் உன்னத ஆனந்தத்திற்கு ஈடாகாதென்றால், காலமென்னும் கூர்வாளினால் வெட்டிச் சாய்க்கப்படும் நிலையில்லாத தேவலோகங்களுக்குச் செல்வதினால் ஒருவன் என்னதான் தேவலோகத்திற்கு உயர்த்தப்பட்டாலும் உரிய காலத்தில் அவன் மீண்டும் கீழே வீழ்வான்.

பதம் 11

பக்திம் முஹி: ப்ரவஹதாம் த்வயி மே ப்ரஸங்கோ
பூயாத் அனந்த மஹதாம் அமவாஸயனாம்
பேனாஞ்ஜஸொல் பணம் உரு – வ்யஸனம் பவாப்திம்
நேஷ்யே பவத் – குண – கதாம்ருத – பான மத்த:

மொழிபெயர்ப்பு

துருவ மகாராஜா தொடர்ந்து கூறினார்: ஓ, அளவிறந்த பகவானே, ஆற்றின் அலைகள் தொடர்ந்து வீசுவதுபோல் உமது உன்னதமான அன்புத் தொண்டில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் சிறந்த பக்தர்களுடன் நான் தொடர்பு கொள்ளுமாறு எனக்கு நீர் அருள்புரிதல் வேண்டும். இதுபோன்ற உன்னதமான பக்தர்கள் முற்றிலும் மாசற்ற வாழ்க்கை நிலை உடையோராக இருக்கின்றனர். பக்தித் தொண்டு புரிவதின் பலனாக தீயின் நாக்குகளைப் போன்று அபாய அலைகளினால் நிரப்பப்பட்டிருக்கும் உலக வாழ்க்கை என்னும் அறியாமைக் கடலினை என்னால் நிச்சயமாக நீந்திக் கடக்க முடியும். இது என்னால் ஆகக்கூடியதே ஏனெனில் என்றும் நித்தியமாக இருக்கும் உமது கல்யாணக்குணங்கள் மற்றும் திருவிளையாடல்களைக் கேட்பதற்கு நான் பித்தனாகியுள்ளேன்.

பதம் 12

தே ந ஸ்மரந்தி அதிதராம் ப்ரியம் ஈஸமர்த்யம்
யே சான்வ அத: ஸீத – ஸீஹ்ருத் – க்ருஹ – வித்த – தாரா:
யே த்வ அப்ஜ – நாப பவதீய – பதாரவிந்த –
ஸெகந்த்ய – லுப்த – ஹ்ருதயேஷீ க்ருத – ப்ரஸங்கா:

மொழிபெயர்ப்பு

ஓ, தாமரையினை உந்திச் சுழியாக உடைய பகவானே, ஒருவன், எப்போதும் உமது தாமரைத் திருவடிகளையும் அதிலிருந்து வரும் நறுமணத்தையும் நாடும் பக்தர்களுடன் கொள்ளும் தொடர்பினால் உடலின் மீதும், அவ்வுடலுடன் கூடிய உறவினால் வரும் சந்ததியினர், நண்பர்கள், குடும்பம், செல்வம் மற்றும் மனைவி போன்ற லோகாயத மனிதர்களுக்கு மிகமிக விருப்பமானவைகளான இவற்றின் மீதும் பற்று வைப்பதில்லை. ஏன் உண்மையில் அவன் அவற்றை லட்சியப்படுத்துவதுகூட இல்லை.

பதம் 13

திர்யன் – நக – த்விஜ – ஸரீஸ்ருப – தேவ – தைத்ய
மர்த்யாதிபி: பரிசிதம் ஸத் – அஸத் – விஸேஷம்
ரூபம் ஸ்தவிஷ்டம் அஜ தே மஹத் – ஆதி – அனேகம்
நாத: பரம் பரம வேத்மி நயத்ர வாத:

மொழிபெயர்ப்பு

போற்றுதலுக்குரிய பகவானே, ஓ, பிறவாத பரம்பொருளே; பல்வேறு வகை உயிர்களான, விலங்குகள், மரங்கள், பறவைகள், ஊர்வன, தேவர்கள் மற்றும் மனிதர்கள் யாவும் உமது பௌதீக சக்தியின் காரணமாகத் தோன்றிய இப்பிரபஞ்சமும் யாங்கணும் பரந்து பட்டிருக்கின்றன என்பதை நான் நன்கறிவேன். மேலும் இவை சில நேரங்களில் வெளிப்படுகின்றன, சில நேரங்களில் வெளிப்படாதிருக்கின்றன என்பதையும் நான் அறிவேன்; ஆயினும் எனது முன்னால் நிற்கின்ற உமது பரம வடிவத்தினைப் பார்க்கின்ற அனுபவம் எனக்கு முன்பு வாய்த்ததே இல்லை. இப்போது அனைத்துவிதக் கற்பனைக் கோட்பாடுகளும் ஒரு முடிவிற்கு வந்துவிட்டன.

பதம் 14

கல்பாந்த ஏதத் அகிலம் ஜடரேண க்ருஹ்ணன்
ஸேதே பு மான் ஸ்வ – த்ருக் அனந்த – ஸகஸ் தத் – அங்கே
யன் – நாபி – ஸிந்து – ருஹ – காஞ்சன – லோக – பத்ம
கர்வே த்யுமான் பகவதே ப்ரணதோ (அ) ஸ்மி தஸ்மை

மொழிபெயர்ப்பு

வணங்குதற்குரிய பகவானே, ஒவ்வொரு கல்பத்தின் இறுதியிலும் முழுமுதற் கடவுளான கர்போதகஸாயீ விஷ்ணு இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் கலைத்துத் தன் வயிற்றினுள் அடக்கிக் கொள்கிறார். அவர் தனது நாகத்தின் மேல் பள்ளிகொண்டிருப்பார். அவரது உந்திச்சுழியில் இருந்து தண்டுடன் கூடியத் தங்கத்தாமரை மலர் ஒன்று தோன்றியது. அதில்தான் பிரம்மதேவன் படைக்கப்பட்டார். அம்முழுமுதற் கடவுள் நீரே என்பதை நான் அறிந்து கொண்டேன், ஆகையினால் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்கு அர்ப்பணிக்கிறேன்.

பதம் 15

த்வம் நித்ய – முக்த பரிசுத்த – விபுத்த ஆத்மா
கூட – ஸ்த ஆதி புருஷோ பகவாம்ஸ் த்ரி – அதீஸ:
யத் புத்தி அவஸ்திதிம் அகண்டிதயா ஸ்வ – த்ருஷ்ட்யா
த்ரஷ்டா ஸ்திதாவ் அதிமகோ வ்யதிரிக்த ஆஸ்ஸே

மொழிபெயர்ப்பு

போற்றுதற்குரிய பகவானே, உமது உடைவில்லாத உன்னதமான பார்வையினால் நீர் அனைத்து மதியுடைச் செயல்களையும் பார்க்கின்ற பரம சாட்சியாக விளங்குகின்றீர். நீர் நித்திய முக்தர், நீர் சுத்த சத்துவ குணத்தில் நிலை பெற்றிருக்கின்றீர். நீரே எந்தவித மாற்றமுமில்லாதப் பரமாத்மாவும் ஆவீர். நீரே ஆறு வளங்களையும் உடைய ஆதி முழுமுதற் கடவுள். மேலும் ஜட இயற்கையின் முக்குணங்களின் நித்திய நாயகரும் நீரே ஆவிர். இவ்வாறு நீர் எப்போதும் பிற உயிர்களிடமிருந்து வேறுபட்டிருக்கின்றீர். பகவான் விஷ்ணுவாக நீர் பிரபஞ்சத்தின் அனைத்தையும் காக்கின்றீர். ஆயினும் நீர் தனித்தே இருக்கின்றீர். மேலும் அனைத்து வேள்விகளின் பலன்களை அனுபவிப்பவரும் நீரே ஆவிர்.

பதம் 16

யஸ்மின் விருத்த – கதயோ ஹி அனிஸம் யுந்தி
வித்யாதயோ விவித – ஸக்தயா ஆனுபூர்வ்யாத்
தத் ப்ரஹ்ம விஸ்வ – பவம் ஏகம் அனந்தம் ஆத்யம்
ஆனந்த – மாத்ரம் அவிகாரம் அஹம் ப்ரபத்யே

மொழிபெயர்ப்பு

போற்றுதற்குரிய பகவானே, உமது அருவ வெளிப்பாட்டில் இரண்டு எதிரெதிர் கூறுகள் உள்ளன ஞானம் மற்றும் அஞ்ஞானம். உமது பல்வேறு சக்திகளும் தொடர்ந்து வெளிப்படுகின்றன. ஆனால் அருவமான பிரம்மமோ பிரிக்கவொண்ணாதது, உண்மையானது, மாற்றமில்லாதது, அளவிறந்தது, ஆனந்தமானது. அதுவே பௌதீகத் தோற்றத்திற்குக் காரணமானதுமாகும். நீரே அவ்வுருவ பிரம்மம் ஆதலினால் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்குச் செலுத்துகிறேன்.

பதம் 17

ஸத்யாஸிஷோ ஹி பகவம்ஸ் தவ பாத – பத்மம்
ஆஸீஷ் ததானுபஜத: புருஷார்த் – மூர்தே:
அபி ஏவம் அர்ய பகவான் பரிபாதிதீனான்
வாஸ்ரேவ வத்ஸகம் அனுக்ரஹ – காதரோ (அ) ஸ்மான்

மொழிபெயர்ப்பு

எந்தன் தேவனே, ஓ, பரமபுருஷ பகவானே, நீரே அனைத்து நல்லாசிகளின் பரம வடிவமாகத் திகழ்கின்றீர். ஆகையினால் மன்னராகி மாநிலத்தை ஆளுவதைக் காட்டிலும் எவ்வித இச்சையுமின்றி உமது பக்தித் தொண்டிற்கு அடிமையாகி உமது தாமரைத் திருவடிகளைத் தொழுவது சாலச்சிறந்ததாகும். உமது தாமரைத் திருவடிகளை வழிபடுவதன் பயனே அது. என் போன்ற அறியாப் பக்தர்களுக்கு நீரே, ஒரு பசு தனக்குப் பிறந்த புதிய கன்றுக்குட்டிக்குப் பால் கொடுத்து அதனை எல்லாவித ஆபத்துக்களிலிருந்தும் காக்கிறதோ அதுபோல் காக்கின்ற கருணைக்கடலாக விளங்குகின்றீர்.

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question