Wednesday, December 4

Prayers by Ladies of Hastinapura (Tamil) / ஹஸ்தினாபுரத்திலுள்ள பெண்களின் பிரார்த்தனைகள்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஸ்ரீமத்பாகவதம்

காண்டம் 1 / அத்தியாயம் 10 / பதம் 21- 25

பதம் 21
ஸ வை கிலாயம் புருஷ: புராதனோ
ய ஏக ஆஸீத் அவிசேஷ ஆத்மனி
அக்ரே குணேப்யோ ஜகத்-ஆத்மனீஸ்வரே
நிமீலிதாத்மன் நிசி ஸுப்த-சக்திஷு

மொழிபெயர்ப்பு

அவர்கள் கூறினர்: நம் சிந்தனையில் தெளிவாக உள்ள அந்த மூல முழுமுதற் கடவுள் இதோ இருக்கிறார். ஜட இயற்கைக் குணங்கள் தோன்றுவதற்கு முன் அவர் மட்டுமே இருந்தார். மேலும் அவர் பரம புருஷர் என்பதால், எல்லா ஜீவராசிகளும், சக்தி முடக்கப்பட்டு, இரவில் உறங்குவதைப் போல் அவருக்குள் ஐக்கியமாகிவிடுகின்றன.

பதம் 22

ஸ ஏவ பூயோ நிஜ-வீர்ய-சோதிதாம்
ஸ்வ-ஜீவ-மாயாம் ப்ரக்ருதிம் ஸிஸ்ருக்ஷதீம்
அனாம-ரூபாத்மனி ரூப-நாமனீ
விதித்ஸமானோ ’னுஸஸார சாஸ்த்ர-க்ருத்

மொழிபெயர்ப்பு

பரம புருஷர் அவரது அங்க உறுப்புக்களான ஜீவராசிகளுக்கு மீண்டும் பெயர்களையும் உருவங்களையும் அளிக்க விரும்பி, அவற்றை ஜட இயற்கையின் வழிகாட்டலின் கீழ் வைத்தார். அவரது சுய ஆற்றலால், மறுபடியும் சிருஷ்டியைச் செய்ய ஜட இயற்கைக்கு சக்தியளிக்கப்படுகிறது.

பதம் 23

ஸ வா அயம் யத் பதம் அத்ர ஸுரயோ
ஜிதேந்ரியா நிர்ஜித-மாதரிஸ்வன:
பஸ்யந்தி பக்தி-உத்கலிதாமலாத்மனா
நன் ஏஷ ஸத்வம் பரிமார்ஷ்டும் அர்ஹதி

மொழிபெயர்ப்பு

அசையாத பக்தித் தொண்டாலும், உயிர் மற்றும் புலன்கள் ஆகியவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்தியதாலும், பௌதிக உணர்விலிருந்து முற்றிலும் தூய்மை அடைந்துள்ள சிறந்த பக்தர்கள் பகவானின் திவ்யமான உருவத்தை அனுபவிக்கின்றனர். அதே பரம புருஷ பகவான் இதோ இருக்கிறார். இந்த பக்திதான் வாழ்வை தூய்மைப்படுத்துவதற்கான ஒரே வழியாகும்.

பதம் 24

ஸ வா அயம் ஸகி அனுகீத-ஸத்-கதோ
வேதேஷு குஹ்யேஷு ச குஹ்ய-வாதிபி:
ய ஏக ஈசோ ஜகத்-ஆத்ம-லீலயா
ஸ்ருஜதி அவதி அத்தி ந தத்ர ஸஜ்ஜதே

மொழிபெயர்ப்பு

அன்புத் தோழிகளே, வேத நூல்களின் அந்தரங்கமான பகுதிகளில், பகவானின் கவர்ச்சியானதும், அந்தரங்கமானதுமான லீலைகள் அவரது சிறந்த பக்தர்களால் விவரிக்கப்பட்டுள்ளன. அதே பரம புருஷ பகவான் இதோ இருக்கிறார். இவர் ஜடவுலகைப் படைத்து, காத்து, அழிப்பதுடன், அதனால் பாதிப்படையாமலும் இருக்கிறார்.

பதம் 25

யதா ஹி அதர்மேண தமோ-தியோ ந்ருபா
ஜீவந்தி தத்ரைஷ ஹி ஸத்வத: கில
தத்தே பகம் ஸத்யம் ருதம் தயாம் யசோ
பவாய ரூபாணி ததத் யுகே யுகே

மொழிபெயர்ப்பு

எப்போதெல்லாம் அரசர்களும், நிர்வாகிகளும் மிருகங்களைப் போல் மிகத்தாழ்ந்த குணங்களில் வாழ்கிறார்களோ, அப்போது உன்னத உருவிலுள்ள பகவான் அவரது பரம சக்தியை, வெளிப்படுத்துகிறார். மேலும் பக்தியுள்ளவர்களுக்கு விசேஷ கருணையைக்காட்டும் அவர், அற்புதச் செயல்களை நிகழ்த்துவதுடன், வேறுபட்ட காலங்களுக்கும், யுகங்களுக்கும் தேவையான அதே திவ்ய ரூபங்களையும் தோற்றுவிக்கிறார்.

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question