Saturday, July 27

Prayers by Demigods (Tamil) / தேவர்களின் பிரார்த்தனைகள்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஸ்ரீமத்-பாகவதம்
காண்டம் 10 / அத்தியாயம் 2 / பதம் 26-41


பதம் 26

ஸத்ய-வ்ரதம் ஸத்ய-பரம் த்ரி-ஸத்யம்
ஸத்யஸ்ய யோனிம் நிஹிதம்ச ஸத்யே
ஸத்யஸ்யே ஸத்யம் ருத-ஸத்ய-நேத்ரம்
ஸத்யாத்மகம் த்வாம் சரணம் ப்ரபன்னா:

மொழிபெயர்ப்பு

தேவர்கள் பின்வருமாறு துதி செய்தனர்: பகவானே, உங்களால் முடிவு செய்யப்படுவன் எல்லாம் முற்றிலும் சரியானவையும், யாராலும் தடுக்க முடியாதவையுமாகும். எனவே எப்பொழுதும் பரிபூர்ணமாக விளங்கும் உங்களுடைய சபத்திலிருந்து நீங்கள் விலகுவதேயில்லை. பிரபஞ்ச தோற்றத்தின் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகிய மூன்று நிலைகளிலும் உங்கள் கை இருப்பதால், நீங்கள் பரம சத்திய மாவீர், உண்மையில், சத்திய சீலராக இல்லாத ஒருவரால் உங்களுடைய அனுகிரகத்தைப் பெறமுடியாது என்பதால், அதைக் கபடமுள்ளவர்களால் அடைய முடியாது, படைப்பிலுள்ள எல்லாப் பொருட்களிலும் நீங்கள் இயக்கச் சக்தியாக, நிஜ உண்மையாக விளங்குகிறீர்கள். எனவேதான் நீங்கள் அந்தர்யாமீ (அகச்சக்தி) எனப்படுகிறீர்கள். நீங்கள் அனைவருக்கும் சமமானவர். உங்களுடைய உபதேசங்கள் எல்லாக் காலங்களிலும் அனைவருக்கும் பொருந்தக் கூடியனவாகும். எல்லா உண்மைகளுக்கும் நீங்களே ஆரம்பம். எனவே நாங்கள் வணக்கத்துடன் உங்களிடம் சரணடைகிறோம் எங்களைக் காத்து அருள்புரிய வேண்டும்.

பதம் 27

ஏகாயனோ ’ஸென த்வி-ஃபலஸ் த்ரி-மூலஸ்
சதூ-ரஸ: பஞ்ச-வித ஷட் ஆத்மா
ஸப்த-த்வக் அஷ்ட-விடபோ நவாக்ஷோ
தச-சதீ த்வி-ககோ ஹி ஆதி-வ்ருக்ஷ:

மொழிபெயர்ப்பு

உடலை (மொத்த உடலும், தனிப்பட்ட உடலும் ஒரே கூட்டுப் பொருட்களால் ஆனவை என்பதால்), “ஆதி விருட்சம்” (மூலமரம்) என்று அழைக்கலாம். நிலமெனும் ஜட இயற்கையை முழுமையாகச் சாரந்துள்ள இம்மரத்திலிருந்து இருவகையான பழங்கள் வருகின்றன. ஒன்று இன்பம் மற்றது துன்பம். மரத்திற்குக் காரணம், அதன் மூன்று வேர்களாக உள்ள சத்வம், ரஜஸ், தமஸ் எனும் மூன்று ஜட இயற்கைக் குணங்களுடன் உள்ள சம்பந்தமாகும், தேக சுகத்திற்கு நான்கு சுவைகள் உள்ளன-மதப்பற்று, பொருளாதார முன்னேற்றம், புலன் நுகர்வு மற்றும் மோட்சம் (அறம், பொருள். இன்பம். வீடு). இவை ஆறு சூழ்நிலைகளுக்கு மத்தியில், ஜந்து, அறிவுப் புலன்களால் அறியப்படுகின்றன. அந்த ஆறு சூழ்நிலைகள், வருத்தம், மாயை, முதுமை, மரணம், பசி மற்றும் தாகம் என்பனவாகும். மரத்தை மூடியுள்ள மரப்பட்டையைப் போல் உள்ள ஏழு உறைகள், தோல், இரத்தம், சைத, கொழுப்பு, எலும்பு, எலும்புத் தசைமற்றும்விந்துஎன்பவையாகும். மேலும்மரத்தின்எட்டுகிளைகளாகஇருப்பவை. ஜந்துஸ்தூலப்பொருட்களும், மூன்று சூட்சுமப் பொருட்களுமாகும்-மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி மற்றும் பொய் அகங்காரம். மரமெனும் உடலில் ஒன்பது துவாரங்கள் உள்ளன கண்கள், காதுகள், நாசித் துவாரங்கள், வாய், மலத்துவாரம் மற்றும் புறப்பாலுறுப்புகள், மேலும் பத்து இலைகள், உடலிலுள்ள பத்து காற்றுகளாகும், மரமெனும் இவ்வுடலில் இருபறவைகள் உள்ளன. ஒன்று தனிப்பட்ட ஆத்மா, மற்றது பரமாத்மா.

*ஒரு மரத்தின் வேர் மண்ணிலிருந்து நீரை (ரஸ) கிரகிப்பதுபோல், உடலானது மதம் (தர்ம), பொருளாதார முன்னேற்றம் (அர்த்த), புலன் நுகர்வு (காம) மற்றும் மோட்சம் (மோக்ஷ) ஆகியவற்றைச் சுவைக்கிறது. நான்கு வகையான சுவைகள் (ரஸ) உள்ளன.

பதம் 28

த்வம் ஏக ஏவாஸ்ய ஸத: ப்ரஸூதிஸ்
த்வம் ஸன்னிதானம் த்வம் அனுக்ரஹஸ்ச
த்வன்-மாயயா ஸம்வ்ருத-சேதஸஸ் த்வாம்
பஸ்யந்தி நானா ந விபஸ்சிதோ யே

மொழிபெயர்ப்பு

பகவானே, பலவிதமான படைப்புக்களுடன் மூல மரமாகதக தோன்றியுள்ள இந்த ஜட உலகிற்குத் தாங்களே மூல பிறப்பிடமாவீர். இந்த ஜட உலகைக் காப்பவரும் தாங்களே. அழிவுக்குப்பின் தங்களுக்குள்ளேயே அனைத்தும் பரிபாலிக்கப்படுகின்றன. உங்களுடைய புறச்சக்தியால் மறைக்கப்பட்டுள்ளவர்களால் இத்தோற்றத்திற்குப் பின்னால் நீங்களிருப்பதைக் காண முடியாது. இவர்களுடைய பார்வை கற்றறிந்த பக்தர்களுடைய பார்வையல்ல.

பதம் 29

பிபர்ஷி ரூபாணி அவ போத ஆத்மா
க்ஷேமாய லோகஸ்யசராசரஸ்ய
ஸத்வோபபன்னானி ஸுகாவஹானி
ஸதாம் அபத்ராணி முஹு: கலானாம்

மொழிபெயர்ப்பு

பகவானே, எப்பொழுதும் முழ அறிவுடன் விளங்கும் தாங்கள், எல்லா ஜீவராசிகளுக்கும் நல்லாதிர்ஷ்டத்தைக் கொண்டுவருவதற்காக, பௌதிக சிருஷ்டியிலிருந்து வேறுபட்ட பல்வேறு உன்னத அவதாரங்களில் தோன்றுகிறீர்கள். இத்தகைய அவதாரங்களில் தோன்றும் பொழுது, சிறந்த சமயப் பற்றுள்ள பக்தர்களுக்கு நீங்கள் இன்பமளிக்கிறீர்கள், பக்தரல்லாதவர்களை அழித்து விடுகிறீர்கள்.

பதம் 30

த்வய் அம்புஜாக்ஷாகில-ஸத்வ-தாம்னி
ஸமாதீனாவேசித-சேதஸைகே
த்வத்-பாத-போதேன மஹத்-க்ருதேன
குர்வந்தி கோவத்ஸ-பதம் பவாப்திம்

மொழிபெயர்ப்பு

தாமரைக் கண்களையுடைய பகவானே, எல்லா உலகிற்கும் உறைவிடமாகிய உங்களுடைய தாமரைப் பாதங்களில் மனதைப் பதித்து, அப்பாதங்களை அறியாமைக் கடலைக் கடப்பதற்குரிய படகாக ஏற்றுக் கொள்வதன் மூலமாக ஒருவன் மகாஜனங்களின் (சிறந்த ஞானிகள், முனிவர்கள் மற்றும் பக்தர்களின்) அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவனாகிறான். இந்த எளிய முறையைக் கொண்டு ஒரு கன்றின் குளம்படியைங் சுலபமாக கடந்துவிடுவது போல், அறியாமைக் கடலை ஒருவரால் கடந்து விட முடியும்.

பதம் 31

ஸ்வயம் ஸமுத்தீர்ய ஸுதுஸ்தரம் த்யுமன்
பவார்ணவம் பீமம் அதப்ர-ஸௌஹ்ருதா:
பவத்-பதாம்போருஹ-நாவம் அத்ர தே
நிதாய யாத்: ஸத்-அனுக்ரஹோ பவான்

மொழிபெயர்ப்பு

பகவானே, பிரகாசிக்கும் சூரியனை ஒத்த நீங்கள் உங்களுடைய பகதர்களில் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு எப்பொழுதும் தயாராக இருக்கின்றன. எனவே நீங்கள் ஒரு கற்பக மரம் (வாஞ்சா-கல்பதரு) என்று அறியப்படுகிறீர்கள். ஆசாரியர்கள் பயங்கரமான அறியாமைக் கடலைக் கடப்பதற்கு உங்களுடைய பத்ம பாதங்களில் முழுமையாகச் தஞ்சமடைந்து, பிறவிக் கடலைக் கடக்கும்பொழுது, எந்த முறையினால் அவர்கள் கடந்தனரோல அதை மண்ணுலகிலேயே விட்டுச் செல்கின்றனர். உங்களுடைய பிற பக்தர்களிடம் நீங்கள் மிகவும் கருணை கொண்டிருப்பதால், அவர்களுக்கு உதவும் பொருட்டு இம்முறையை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்.

பதம் 32

யே ’ன்யே ’ரவிந்தாக்ஷ விமுக்த-மானினஸ்
த்வய அஸ்த-பாவாத் அவிசுத்த-புத்தய:
ஆருஹ்ய க்ருச்ரேண பரம் பதம் தத:
பதந்தி அதோ ’நாத்ருத-யுஷ்மத்-அங்ரய:

மொழிபெயர்ப்பு

(பகவானின் தாமரைப் பாதங்களில் எப்பொழுதும் புகலிடம் தேடும் பக்தர்கள் ஒருபுறமிருக்க, பக்தரல்லாதவர்களும் முக்தியடைவதற்கு வேறுபட்ட முறைகளை ஏற்றுக்கொண்டுள்ள மற்றவர்களும் உள்ளனர். இவர்கள கதி என்னவாகும் என்று ஒருவர் கேட்கக்கூடும். இக் கேள்விக்குப் பதிலாக பிரம்மதேவரும், பிற தேவர்களும் இவ்வாறு கூறினர்:) தாமரைக்கண்களையும் உடைய பகவானே, மிக உயர்ந்த நிலையை அடையக் கடுந்தவங்களையும், விரதங்களையும் ஏற்றுக் கொண்டுள்ள பக்தரல்லாதவர்கள், தாங்கள் முக்தியடைந்து விட்டதாக எண்ணிக் கொண்ட போதிலும், அவர்களுடைய புத்தி தூய்மையற்றதாகவே உள்ளது. உங்களுடைய தாமரைப் பாதங்களை அவர்கள் அலட்சியப் படுத்துவதால் உயர்ந்த நிலையில் இருப்பதாக மனக்கற்பனை செய்யும் தங்களுடைய நிலையிலிருந்து அவர்கள் கீழே விழுகின்றனர்.

பதம் 33

ததா ந தே மாதய தாவகா: க்வசித்
ப்ரஸ்யந்தி மார்காத் த்வயி பத்த-ஸௌஹ்ருதா:
த்வயாபிகுப்தா விசாந்தி நிர்பயா
வினாயகாளீகப-மூர்தஸுப்ரபோ

மொழிபெயர்ப்பு

ஒ மாதவா, ஸ்ரீதேவியின் பதியாகிய பரமபுருஷரே, உங்களிடம் பூரண அன்பு கொண்டுள்ள பக்தர்கள் சிலசமயங்களில் பக்தி மார்கத்திலிருந்து விழ நேர்ந்தாலும், அவர்களை நீங்கள் காப்பாற்றுவதால், அவர்கள் பக்தரல்லாதவர்களைப் போல் வீழ்வதில்லை. இவ்வாறாக அவர்கள் எதிரிகளின் தடைகளை அச்சமின்றி கடந்து, பக்தித் தொண்டில் தொடர்ந்து முன்னேறுகின்றனர்.

பதம் 33

ஸத்வம் விகத்தம் ஸ்ரயதே பவான் ஸ்திதௌ
சரீரிணாம் ஸ்ரேய-உபாயனம் வபு:
வேத-க்ரியா-யோக-தப:-ஸமாதிபிஸ்
தவார்ஹணம் யேன ஜன: ஸமீஹதே

மொழிபெயர்ப்பு

பகவானே, உலகைப் பராமரிக்கும் காலத்தில், ஜட இயற்கைக் குணங்களுக்கு அப்பாற்பட்ட பல உன்னத உடல்களை தாங்கள் வெளிப்படுத்துகிறீர்கள். இவ்வாறு தோன்றும்பொழுது, வேதச் சடங்குகள், அஷ்டாங்கு-யோகம், தவ விரதங்கள் மற்றும் ஆழ்ந்த, நிலையான சமாதி போன்ற வேதச் செயல்களை இயற்றும் முறையை போதிப்பதன் மூலமாக ஜீவன்களுக்கு எல்லா நல்லாசிகளைழும் நீங்கள் அருளுகிறீர்கள். இவ்வாறாக வேதக் கொள்கைகளால் நீங்கள் ஆராதிக்கப்படுகிறீர்கள்.

பதம் 35

ஸத்வம் ந சேத் தாதுர் இதம் நிஜம் பவேத்
விக்ஞானம் அக்ஞான-பிதாபமார்ஜனம்
குண-ப்ரகாசைர் அனுமீயதே பவான்
ப்ரகாசதே யஸ்யச யேன வா குண:

மொழிபெயர்ப்பு

எல்லாக் காரணங்களுக்கும் காரணமான பகவானே, உங்களுடைய உன்னத உடல் ஜட இயற்கைக் குணங்களுக்கு மேற்பட்டதாக இல்லா திருக்குமானால், ஜடத்திற்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள வேறுபாட்டை ஒருவரால் புரிந்துகொள்ள முடியாது. ஜட இயற்கையை ஆளும் உங்களது உன்னத உருவின் இருப்பால் வசிகரிக்கப்பட்டாலொழிய, உங்களது உன்னத இயற்கையை அறிவது மிகக் கடினம்.

பதம் 36

ந நாம-ரூபே குண-ஜன்ம-கர்மபிர்
நிரூபிதவ்யே தவ தஸ்ய ஸாக்ஷிண:
மனோ-வசோப்யாம் அனுமேய-வர்த்மனோ
தேவ க்ரியாயாம் ப்ரதியந்தி அதாபி ஹி

மொழிபெயர்ப்பு

பகவானே, வெறும் மனக் கற்பனையில் ஈடுபடுவர்களால் உங்களுடைய உன்னத நாமமும், உருவமும் அறியப்படுவதில்லை. பக்தித் தொண்டால் மட்டுமே உங்களுடைய நாமம். ரூபம் மற்றும் குணங்கள் ஆகியவற்றை அறிய முடியும்.

பதம் 37

ஸ்ருண்வன் க்ருணன் ஸம்ஸ்மரயம்ஸச சிந்தயன்
நாமானி ரூபாணிச மங்களானி தே
க்ரியாஸு யஸ் த்வச்-சரணாரவிந்தயோர்
ஆவிஷ்ட-சேத ந பவாய கல்பதே

மொழிபெயர்ப்பு

உங்களுடைய தாமரைப் பாதங்களில் தங்களுடைய மணங்களை முழுமையாகப் பதித்துள்ளவர்களும், உன்னதமான உங்களுடைய நாம, ரூபங்களைப் பற்றி இடையறாது கேட்டு, பாடி, ஆழ்ந்து சிந்திப்பவர்களும், பிறர் அவற்றை நினைவுகூறும்படிச் செய்பவர்களுமான பக்தர்கள், பல்வேறு செயல்களில ஈடுபட்டிருக்கும் பொழுதுகூட உன்னத படித்தரத்தில் நிலை பெற்றவர்களாக உள்ளனர். எனவே அவர்களால் பரமபுருஷரை அறிய முடியும்.

பதம் 38

திஷ்ட்யா ஹரே ’ஸ்யா பவத: பதோ புவோ
பாரோ ’பனீதஸ் தவ ஜன்மனேசிது:
திஷ்டயாசகிதாம் த்வத்-பதகை: ஸுசோபனைர்
த்ரக்ஷ்யாம காம் த்யாம்ச தவானுகம்பிதாம்

மொழிபெயர்ப்பு

பகவானே, இந்த பூமியிலுள்ள பெரிய அசுர பாரம் உங்களுடைய தோற்றத்தால் உடனே அகற்றப்பட்டு விடுகிறது. எனவே நாங்கள் பாக்கியசாலிகள். உண்மையில், உங்களுடைய தாமரைப் பாதங்களை அலங்கரிக்கும் சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை ஆகிய சின்னங்களை, இம் மண்ணுலகிலும், சுவர்க்கலோகங்களிலும் எங்களால் காண முடியும் என்பதால், நாங்கள் பாக்கியசாலிகள் என்பதில் ஜயமில்லை.

பதம் 39

ந தே ’பவஸ்யேங் பவஸ்ய காரணம்
வினா வினோதம் பத தர்கயாமஹே
பவோ நிரோத: ஸ்திதிர் அபி அவித்யயா
க்ருதா யதஸ் த்வ்ய் அபயாஸ்ரயாத்மனி

மொழிபெயர்ப்பு

பரமபுருஷரே, நீங்கள் கர்ம பந்தத்தினால் இவ்வுலகில் தோன்றும் ஒரு சாதாரண ஜீவராசியல்ல. எனவே, இவ்வுலகில் நீங்கள் தோன்று வதற்கு அல்லது பிறப்பதற்கு, உங்களுடைய இன்பச் சக்தியைத் (லீலையை) தவிர வேறு காரணமில்லை. அதைப்போலவே, உங்களுடைய ஒரு பாகமாக உள்ள ஜீவராசிகள், உங்களது புறச்சக்தியினால் நடத்தப்படும்பொழுது தவிர, பிறப்பு, இறப்பு முதுமை போன்ற துன்பங்களுக்கு ஆளாகவேண்டிய காரணமில்லை.

பதம் 40

மத்ஸ்யாஸ்வ-கச்சப-ந்ருஸிம்ஹ-வராஹ-ஹம்ஸ
ராஜன்ய-விப்ர-விபுதேஷு க்ருதாவதார:
த்வம் பாஸி நஸ் த்ரி-புவனம் ச யதாதுனேச
பாரம் புவோ ஹர யதூத்தம் வந்தனம் தே

மொழிபெயர்ப்பு

பரமபுருஷரே, உங்களது கருணையினால் உலகைக் காப்பாற்றுவதற்காக முன்பு நீங்கள் மீனாகவும், குதிரையாகவும், ஆமையாகவும், நரசிம்மதேவராகவும், பன்றியாகவும், அன்னப் பறவையாகவும், பகவான் இராமசந்திரராகவும், பரசுராமராகவும், தேவராகவும் மற்றும் வாமன தேவராகவும் அவதாரங்களை ஏற்றீர்கள். இப்பொழுது உங்களுடைய கருணையினால் இவ்வுலகிலுள்ள தொல்லைகளைச் குறைந்த மீண்டும் எங்களைக் காப்பாற்றி அருளுங்கள் யாதவ சிரேஷ்டரே, கிருஷ்ணர் நாங்கள் மரியாதையுடன் எங்களுடைய வணக்கஙகளை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.

பதம் 41

திஷ்ட்யாம் தே குக்ஷி-கத: பர: புமான்
அம்சேன ஸாக்ஷாத் பகவான் பவாய ந:
மாபூத் பயம் போஜ-பதேர் முமூர்ஷோர்
கோப்தா யதூனாம் பவிதா தவாத்மஜ:

மொழிபெயர்ப்பு

தாயே தேவகி, உங்களுடைய நல்லதிஷ்டத்தாலும், எங்களுடைய நல்லதிர்ஷ்டத்தாலும், பரமபுருஷர் பலதேவரைப் போன்ற அவரது எல்லா அம்சங்களுடனும் இப்பொழுது உங்களுடைய கர்பத்தில் தோன்றியிருக்கிறார். உங்களது நித்திய புதல்வரான கிருஷ்ணர், யது வம்சம் முழுவதற்கும் காவலராக விளங்குவார்.

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question