Friday, July 26

Prayers by Bhisma Dev (Tamil) / பீஷ்மதேவர் பிரார்த்தனை

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஸ்ரீமத்பாகவதம்

காண்டம் 1 / அத்தியாயம் 9 / பதம் 32- 42

பதம் 32

ஸ்ரீ பீஷ்ம உவாச

இதி மதிர் உபகல்பிதா வித்ருஷ்ணா
பகவதி ஸாத்வத-புங்கவே விபூம்னி
ஸ்வ ஸுகம் உபகதே க்வசித் விஹர் தும்
ப்ரக்ருதிம் உபேயுஷி யத்-பவ-ப்ரவாஹ:

மொழிபெயர்ப்பு

பீஷ்மதேவர் கூறினார்: இதுவரை வெவ்வேறு விஷயங்களிலும், கடமைகளிலும் ஈடுபட்டிருந்த எனது சிந்தனை, உணர்வு மற்றும் விருப்பம் ஆகியவற்றை இப்பொழுது நான் சர்வசக்தி படைத்தவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரில் ஈடுபடுத்துவேனாக. அவர் எப்பொழுதும் சுய திருப்தியுடையவராவார். ஆனால் அவரிடமிருந்து தான் ஜடவுலகம் படைக்கப்படுகிறது என்றாலும், அவர் பக்தர்களின் தலைவராக இருப்பதால், ஜடவுலகில் அவதரித்து தெய்வீக இன்பத்தை அவர் அனுபவிக்கிறார்.

பதம் 33

த்ரி-புவன-கமனம் தமால-வர்ணம்
ரவி-கர-கௌர-வர-அம்பரம் ததானே
வபுர் அலக குலாவ்ருதானனாப்ஜம்
விஜய-ஸகே ரதிர் அஸ்து மே ’னவத்யா

மொழிபெயர்ப்பு

ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனின் நெருங்கிய நண்பராவார். அவர் தமால மரத்தின் நீல நிறத்தையொத்த திவ்யமான உடலுடன் இவ்வுலகில் தோன்றியுள்ளார். மூன்று கிரக அமைப்புக்களில் (மேல், மத்திய, கீழ்) உள்ள அனைவரையும் அவரது உடல் கவர்ந்திழுக்கிறது. பளபளக்கும் அவரது மஞ்சள் நிற ஆடையும், சந்தனக் குழம்பினால் வரையப்பட்ட சித்திரங்களைக் கொண்ட, அவரது தாமரை முகமும் என்னைக் கவர்ந்திழுக்கும் பொருட்களாக அமைய வேண்டும். மேலும் கர்ம பலன்களில் நான் பற்றில்லாமல் இருப்பேனாக.

பதம் 34

யுதி துரக-ரஜோ-விதூம்ர-விஷ்வக்
கச-லூலித-ஸ்ரமவாரி-அலங்க்ருதாஸ்யே
மம நிசித-சரைர் விபித்யமான-
த்வசி விலஸத் கவசே ’ஸ்து க்ருஷ்ண ஆத்மா

மொழிபெயர்ப்பு

(சிநேகத்தினால் அர்ஜுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் ஏவல் புரிந்த இடமான) போர்க்களத்தில், குதிரைகளின் குளம்புகளால் எழுப்பப்பட்ட தூசுகளினால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அலைபாயும் கேசம் சாம்பல் நிறமாக மாறியது. மேலும் அவரது பணியினால் விளைந்த வியர்வை முத்துக்கள் அவரது முகத்தை நனைத்தன. எனது கூரிய அம்புகள் தைத்த காயங்களால் அதிகரிக்கப்பட்ட இவ்வெல்லா அலங்காரங்களையும் அவர் அனுபவித்தார். என் மனம் ஸ்ரீ கிருஷ்ணரிடமே ஆழ்ந்து விடட்டும்.

பதம் 35

ஸபதி ஸகி-வசோ நிசம்ய மத்யே
நிஜ-பரயோர் பலயோ ரதம் நிவேஸ்ய
ஸ்திதவதி பர-ஸைனிகாயுர் அக்ஷணா
ஹ்ருதவதி பார்த-ஸகே ரதி மமாஸ்து

மொழிபெயர்ப்பு

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவரது நண்பனின் உத்தரவை ஏற்று, அர்ஜுனனுடைய சேனைக்கும், துரியோதனனின் சேனைக்கும் மத்தியில் தேரை ஓட்டினார். அங்கிருந்த சமயத்தில், தமது கருணைமிகுந்த பார்வையால் எதிரிலுள்ள படைப்பிரிவினரின் ஆயுளைக் குறைத்துவிட்டார். எதிரியின் மீது பார்வையைச் செலுத்தியே இதை அவர் சாதித்துவிட்டார். அந்த கிருஷ்ணரின் மீது என் மனம் நிலைக்கட்டும்.

பதம் 36

வ்யவஹித-ப்ருதனா-முகம் நிரீக்ஷ்ய
ஸ்வ-ஜன-வதாத் விமுகஸ்ய தோஷ-புத்யா
குமதிம் அஹரத் ஆத்ம-வித்யயா யஸ்
சரண-ரதி: பரமஸ்ய தஸ்ய மே ’ஸ்து

மொழிபெயர்ப்பு

போர்க்களத்தில் தனக்கு முன் இருந்த வீரர்களையும், சேனாதிபதிகளையும் பார்வையிட்ட அர்ஜுனன், அறியாமையினால் கலக்கமடைந்ததாக காணப்பட்ட பொழுது, பகவான் அவருக்கு ஆன்மீக அறிவைப் புகட்டி அவரது அறியாமையைக் களைந்தார். அவரது தாமரைப் பாதங்கள் எப்பொழுதும் என்னைக் கவர்ந்திழுக்கும் பொருளாக அமையட்டும்.

பதம் 37

ஸ்வ-நிகமம் அபஹாய மத்-ப்தரிக்ஞாம்
ருதம் அதிகர் தும் அவப்லுதோ ரதஸ்த:
த்ருத-ரத-சரணோ ’ப்யயாச் சலத்குர்
ஹரிர் இவ ஹந்தும் இபம் கதோத்தரீய:

மொழிபெயர்ப்பு

அவரது சொந்த வாக்குறுதியை மீறி என் ஆசையை நிறைவேற்றும் வகையில், தேரிலிருந்து கீழே குதித்த அவர், அதன் சக்கரத்தை கையில் எடுத்துக்கொண்டு, சிங்கம் யானையைக் கொன்றுவிட செய்வதைப் போல், என்னை நோக்கி விரைவாக ஓடிவந்தார். வழியில் அவரது மேலாடையும் கூட சரிந்து கீழே விழுந்தது.

பதம் 38

சித-விசிக-ஹதோ விசீர்ண-தம்ச:
க்ஷதஜ-பரிப்லுத ஆததாயினோ மே
ப்ரஸபம் அபிஸஸார மத்-வதார்தம்
ஸ பவது மே பகவான் கதிர் முகுந்த:

மொழிபெயர்ப்பு

முக்தி அளிப்பவரான, அந்த பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே எனது முடிவான இலக்காக இருப்பாராக, எனது கூரிய அம்புகளால் ஏற்பட்ட காயங்களினால் கோபமடைந்ததைப் போல், போர்க்களத்தில் என்னை அவர் திடீரென்று தாக்க முற்பட்டார். அவரது கேடயம் சிதறிப் போயிருந்தது. மேலும் காயங்களினால் அவரது உடலில் இரத்தம் தோய்ந்திருந்தது.

பதம் 39

விஜய-ரத-குடும்ப ஆத்த-தோத்ரே
த்ருத-ஹய-ரஸ்மினி தச்-ச்ரியேக்ஷணீயே
பகவதி ரதிர் அஸ்து மே முமூர்ஷோர்
யம் இஹ நிரீக்ஷ்ய ஹதா கதா: ஸ்வ-ரூபம்

மொழிபெயர்ப்பு

இறக்கும் சமயத்தில் எனது இறுதி கவர்ச்சி பரம புருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணர் மீது நிலைபெறட்டும். வலது கரத்தில் ஒரு சாட்டையையும், இடது கரத்தில் கடிவாளத்தையும் பிடித்திருந்தவரும், எல்லா வகையிலும் அர்ஜுனனின் இரதத்திற்குப் பாதுகாப்பளிப்பதில் மிகவும் கவனமாக இருந்தவருமான அர்ஜுனனுடைய சாரதியின் மீது என் மனதை நான் ஒருமுனைப்படுத்துகிறேன். குருட்சேத்திரப் போர்க்களத்தில் அவரைக் கண்டவர்கள், மரணத்திற்குப் பின் அவர்களது சுய உருவங்களைப் பெற்றனர்.

பதம் 40

லலித-கதி-விலாஸ-வல்குஹாஸ-
ப்ரணய-நிரீக்ஷண-கல்பிதோருமானா:
க்ருத-மனு-க்ருத-வத்ய உன்மதாந்தா:
ப்ரக்ருதிம் அகன் கில யஸ்ய கோப-வத்வ:

மொழிபெயர்ப்பு

அன்பான புன்னகையாலும், அசைவுகளாலும் விருந்தாவனத்தின் இளநங்கைகளைக் (கோபியர்கள்) கவர்ந்தவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் என் மகன் நிலை பெறட்டும். (ராச நடனத்திலிருந்து பகவான் மறைந்த பிறகு) இளநங்கைகள் பகவானின் அங்க அசைவுகளை அப்படியே நடித்துக் காட்டினர்.

பதம் 41

முனி-கண-ந்ருப-வர்ய-ஸங்குலே ’ந்த:
ஸதஸி யுதிஷ்டிர-ராஜஸூய ஏஷாம்
அர்ஹணம் உபபேத ஈக்ஷணீயோ
மம த்ருசி-கோசர ஏஷ ஆவிர் ஆத்மா

மொழிபெயர்ப்பு

யுதிஷ்டிர மகாராஜனால் இயற்றப்பட்ட ராஜஸூய யாகத்தின் போது, அரச குடும்பத்தினர் மற்றும் பண்டிதர்கள் ஆகிய மிகச்சிறந்த உலகப் பிரமுகர்கள் அனைவரும் அங்கு கூடியிருந்தனர். அச்சிறந்த கூட்டத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அனைவராலும் இணையற்ற பரம புருஷராக வழிபடப்பட்டார். இச்சம்பவம் நான் இருக்கும்பொழுது நடந்ததாகும். மேலும் பகவானிடம் என் மனதை பதிப்பதற்காகவே இச்சம்பவத்தை நான் நினைவுகூர்ந்தேன்.

பதம் 42

தம் இமம் அஹம் அஜம் சரீர-பாஜாம்
ஹ்ருதி ஹ்ருதி திஷ்டிதம் ஆத்ம கல்பிதானாம்
ப்ரதித்ருசம் இவ நைகதார்கம் ஏகம்
ஸமதி-கதோ ’ஸ்மி விதூத-பேத-மோஹ:

மொழிபெயர்ப்பு

பகவான் எல்லோருடைய இதயத்திலும் இருக்கிறார், மனக் கற்பனையாளர்களின் இதயத்திலும் இருக்கிறார் என்பதற்கு எதிரான எண்ணத்திலிருந்து இப்பொழுது நான் விடுபட்டுவிட்டேன் என்பதால், இப்பொழுது என் முன் நிற்கும் அந்த ஒரே பகவானாகிய ஸ்ரீ கிருஷ்ணரை முழு மன ஒருமையுடன் என்னால் தியானிக்க முடிகிறது.

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question