Thursday, November 21

Parvata Muni (Tamil) / பர்வத முனி

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

வயது முதிர்ந்த முனிவர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். இவர் எப்பொழுதுமே நாரத முனிவருடனேயே இருப்பவராவார். அவர்கள் எந்த வாகனத்தின் உதவியும் இல்லாமல் காற்றில் பிரயாணம் செய்யும் தகுதியுடைய விண்வெளி யாத்திரீகர்களாவர். நாரதரைப் போலவே பர்வத முனியும் கூட ஒரு தேவரிஷி, அல்லது தேவர்களுக்கு இடையிலான சிறந்த ரிஷியாவார். பரீட்சித்து மகாராஜனின் புதல்வரான ஜனமேஜய மகாராஜனின் யாகச் சடங்கில் அவரும் நாரதருடன் இருந்தார். இந்த யாகத்தில் உலகிலுள்ள எல்லா பாம்புகளும் கொல்லப்படுவதாக இருந்தது. பர்வத முனிவராலும், நாரத முனிவராலும் பகவானின் பெருமைகளைப் பாடிக் கொண்டு காற்றில் பிரயாணம் செய்ய முடியும் என்பதால் அவர்கள் கந்தவர்கள் என்றுகூட அழைக்கப்பட்டனர். அவர்களால் காற்றில் பிரயாணம் செய்ய முடியும் என்பதால், ஆகாயத்தில் இருந்துகொண்டே திரௌபதியின் சுயம்வர சடங்கை அவர்கள் கவனித்தனர். நாரத முனிவரைப் போலவே பர்வத முனிவரும் கூட ஸ்வர்கத்திலுள்ள தேவேந்திரனின் ராஜசபைக்குச் சென்று வருவது வழக்கம். கந்தர்வரான அவர் சில சமயங்களில், முக்கிய தேவர்களுள் ஒருவரான குபேரனின் ராஜசபைக்கும் சென்று வந்தார். நாரதரும், பர்வதரும் ஒருமுறை சிருஞ்சய மகாராஜனின் மகளுடன் பிரச்சினையில் அகப்பட்டுக் கொண்டனர். சிருஞ்சய மகாராஜன் பர்வத முனியிடமிருந்து ஒரு மகனை வரமாகப் பெற்றார்.

– ஸ்ரீமத் பாகவதம் 1.9.7 (பொருளுரை)

1 Comment

  • R..Rsjaraman

    பாகவதத்தில் தினமும்.ஒரு அத்தியாயம் விளக்கம் அளிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question