புராண வரலாறுகளுடன் தவிர்க்க இயலாதபடி சம்பந்தப்பட்டுள்ளார். பாகவதத்தில் அவர் விவரிக்கப்படுகிறார். முற்பிறப்பில் அவர் ஒரு வேலைக்காரியின் மகனாக இருந்தார். ஆனால் தூய பக்தர்களுடன் கொண்ட நல்லுறவினால் பக்தித் தொண்டைப் பற்றிய அறிவை அவர் பெற்றார். மேலும் அவரது அடுத்த பிறப்பில் நிகரற்ற ஒரு பூரண மனிதராக அவர் மாறினார். அவர் தேவரிஷிகளில் தலைமையானவராவார். மகாபாரதத்தில் அவரது பெயர் பல இடங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அவர் பிரம்மதேவரின் மகனும், சீடருமாவார். அவர் மூலமாக பிரம்மாவின் சீடப்பரம்பரை பரப்பப்பட்டு உள்ளது. பிரகலாத மகாராஜனுக்கும், துருவ மகாராஜனுக்கும், பகவானின் மற்றும் பல புகழ்பெற்ற பக்தர்களுக்கும் அவர் தீட்சை வழங்கினார். வேத இலக்கியங்களின் ஆசிரியரான வியாசதேவருக்கும் கூட அவர் தீட்சை வழங்கினார். வியாசரிடமிருந்து மத்வாச்சாரியர் தீட்சைப் பெற்றார். இவ்வாறாக கௌடீய சம்பிரதாயத்தையும் உள்ளடக்கியதான மத்வ சம்பிரதாயம் பிரபஞ்சம் முழுவதிலும் பரவியுள்ளது. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இந்த மத்வ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவராவார்; ஆகவே, பிரம்ம தேவர், நாரதர் மற்றும் வியாசரிலிருந்து மத்வர், சைதன்யர், கோஸ்வாமிகள் வரையுள்ள அனைவரும் ஒரே சீடப் பரம்பரையைச் சேர்ந்தவர்களாவர். நாரதர் கற்பனைக்கெட்டாத காலத்திலிருந்து பல அரசர்களுக்கு உபதேசித்து வந்துள்ளார். பிரகலாத மகாராஜன் அவரது தாயின் கருவில் இருக்கும்பொழுது நாரதர் அவருக்கு உபதேசித்ததை பாகவதத்தில் நம்மால் காண முடியும். மேலும் அவர் கிருஷ்ணரின் தந்தையான வசுதேவருக்கும், யுதிஷ்டிர மகாராஜனுக்கும் கூட உபதேசம் வழங்கினார்.
– ஸ்ரீமத் பாகவதம் 1.9.7 (பொருளுரை)