Thursday, November 21

நம்பிக்கை / Faith (Tamil)

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

நம்பிக்கை

ஆன்மீக வாழ்வின் அஸ்திவாரம்

நம்பிக்கை ஆன்மீக முன்னேற்றத்தின் அஸ்திவாரம். நம்பிக்கையுடன் இருப்பது நமது இயற்கையாகும். ஆனால் அந்த நம்பிக்கை எப்படி பட்டதாக இருக்க வேண்டும்?

பொதுவாக நம்பிக்கையில் பல வகைகள் இருக்கின்றன. இருப்பினும் நம்பிக்கையை குறிப்பாக இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று ஆன்மீக நம்பிக்கை, மற்றொன்று பௌதிக நம்பிக்கை.

ஆன்மீக நம்பிக்கை

ஸ்ரீலரூப கோஸ்வாமி அவர்கள் இந்த ஆன்மீக நம்பிக்கையை ‘ஆஷா பந்த’ என்று குறிப்பிடுகிறார். ஆன்மீக நம்பிக்கை இருக்கக் கூடிய ஒரு பக்தர், “நான் என்னால் முடிந்தவரை பக்தி நெறிகளை கடைபிடித்து வருகின்றேன். ஆகவே எப்படியாவது என்றைக்காவது நான் பகவானின் கருணையை பெறுவேன். கண்டிப்பாக என்னால் பகவானிடம் திரும்பிச் செல்ல முடியும். எனக்கு எந்த விதமான தகுதியும், ஞானமும், பகவானின் மேல் அன்பும் இல்லை என்றாலும், நான் பகவானிடம் செல்ல விரும்புகின்றேன். அதற்காக பகவானின் கரு ணையை வேண்டி நிற்கின்றேன்” என்று எப்போதும் கருதுவார்.

அதாவது ஆன்மீக நம்பிக்கையை கொண்ட ஒரு பக்தர் பகவானிடம் பிரார்த்திக்கின்றார். “பகவானே நான் தங்களிடம் வந்துள்ளேன். தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள்” என்று.

ஸ்ரீமத் பாகவதத்தில் 5.5.15ல், “ஒருவர் பகவானிடம் திரும்பிச் செல்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தால் அவர் கண்டிப்பாக பகவானின் கருணையை எதிர்பார்த்து இருக்க வேண்டும். அவர் பகவானின் கருணையையே வாழ்வின் நோக்கமாக கருத வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படியாக, ஒருவர் தன் வாழ்வில் என்றும் பகவானின் கருணையை எதிர்பார்த்து இருப்பதுவே ஆன்மீக நம்பிக்கையாகும்.

பௌதிக நம்பிக்கை:

பகவத்கீதையின் ஒன்பதாவது அத்தியாயத்தில் கிருஷ்ணர், ‘மோகாஷா’ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். ‘மோக’ என்றால் தோல்வி என்று பொருள். மோகாஷா என்றால், தங்கள் நம்பிக்கையில் தோல்வி அடைந்தவர்கள் என்று பொருள்.

பிறகு 16வது அத்தியாயத்தில், ஆசாபாசங்களைப்  பற்றி குறிப்பிடுகின்றார். அதாவது ஆயிரக்கணக்கான ஆசைகள், காமம், குரோதம் போன்றவற்றில் மூழ்கியிருப்பவர்களைப் பற்றி குறிப்படுகிறார். மேலும் அதில் “பெயர், புகழ், செல்வம், வெற்றி போன்ற எந்த விதமான பௌதிக நம்பிக்கையும் தோல்வியிலேயே முடியும்” என்று பகவான் வலியுறுத்துகிறார்.

எனவே உண்மையில் நாம் ஆன்மீக நம்பிக்கை உடையவர்களாக  இருக்க வேண்டும். ஆனால் மாறாக வாழ்க்கையால் பௌதிகமாக நமது நம்பிக்கை, மாறியுள்ளது. பலவிதமான அதிருப்திக்கு ஆளாகின்றோம். “யாரொருவர் பெளதிகமான நம்பிக்கையில் முழ்கியிருக்கின்றாரோ, கிருஷ்ணர் கூறுகிறார் அவர் ஏக்கத்துடனும், கவலைகளுடனும் துன்பகரமான சூழ்நிலையில் இறுதியில் தோல்வி அடைவார்” என்று பகவத்கீதை குறிப்பிடுகிறது.

ஆகவே இவ்வாறு தோல்வி அடைவதிலிருந்து நாம் விடுபட வேண்டுமானால் நம்பிக்கையை, இந்த பௌதிகமான ஆன்மீக நம்பிக்கையாக மாற்ற வேண்டும்.

நம்பிக்கையை மாற்றுவது எப்படி? முதலில் பகவானின் விருப்பத்தை ஏற்றுக் கொள்ளுதல்.

ஸ்ரீமத் பாகவதத்தில் கௌரவர்களின் தந்தையான மன்னர் திருதராஷ்டிரர் பற்றி  குறிப்பிடப்பட்டுள்ளது. மஹாபாரத் போரின் முடிவில் துரியோதனன் உட்பட திருதராஷ்டிரரின் புதல்வர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.

அதன்பிறகு திருதராஷ்டிரர், பாண்டவர்களின் தயவில் வாழத் துவங்கினார். முன்பு எந்த பாண்டவர்களை அவர் பலவிதமான துன்பங்களை கொடுத்து அழிக்க நினைத்தாரோ, இப்பொழுது அதே பாண்டவர்களின் அடைக்கலத்தில் இருந்தார்.

அச்சமயத்தில் அவருடைய சகோதரரும், கிருஷ்ணரின் தூய பக்தருமான விதுரர், திருதராஷ்டிரருக்கு எப்படியாவது ஆன்மீக வாழ்வை உணர வைக்க வேண்டும் என்று கருதினார். முக்கியமாக திருதராஷ்டருடைய பௌதிக நம்பிக்கையை, ஆன்மீக நம்பிக்கையாக மாற்ற விரும்பினார்.

ஆகவே திருதராஷ்டிரரை அணுகி பின்வருமாறு கூறலானார், ”அன்பிற்குரிய சகோதரரே! பரம புருஷ ராகிய பகவான் இப்பொழுது காலனாக மாறி, நமது அனைவரையும் நெருங்கி கொண்டியிருக்கிறார். அந்த காலனின் ஆதிகத்தில் இருப்பவர்கள், தங்களுக்கு பிரியமான உயிரையே தியாகம் செய்ய வேண்டியிருக் கிறது. அப்படியிருக்க செல்வம், மரியாதை, குழந்தைகள், நிலம் மற்றும் இல்லம் போன்ற பொருள்களைப் பற்றி என்னவென்று கூறுவது? உங்களுடைய தந்தை, சகோதரர், நண்பர்கள் மற்றும் மகன்கள் என அனைவரும் இறந்துவிட்டனர். நீங்களும் வாழ்வில் பெரும் பகுதியை கழித்து விட்டீர்கள். உங்களுடைய உடலும் முதுமை அடைந்து விட்டது”. – ஸ்ரீமத் பாகவதம் 1.11.19-21

ஆகவே பௌதிக நம்பிக்கையை, ஆன்மீக நம்பிக்கை யாக மாற்றுவதற்கு முதல்படி என்னவென்றால், முதலில் பகவான் கிருஷ்ணரை, அவரது கால ரூபத்தில் நாம் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும்.

அந்த காலம் நம்மிடம் உள்ள அனைத்து பௌதிக விஷயங்களையும் எடுத்துவிடும். இந்த பிரபஞ்சத்தில் ஒருவரும் காலனின் ஆதிகத்திலிருந்து தப்ப முடியாது. ஆகவே பௌதிக வாழ்க்கையை பொறுத்தவரை, நமது நிலை நம்பிக்கையற்றது ஆகும். பகவானின் படைப்பில் எல்லோரும் மூப்பு, இறப்பு, பிணியை சந்திக்க வேண்டியிருக்கும். ஆகவே நாமே அழியக்கூடிய நிலையில் இருக்கும்பொழுது, நம்மிடம் உள்ள பௌதிக விஷயங்கள் கண்டிப்பாக அழியக்கூடியதாகும்.

எனவே நமது நிலையை நாம் முழுவதுமாக புரிந்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். ஒருவர் தற்காலிகமான பௌதிகமான விஷயங்களின் மீது நம்பிக்கை வைக்க கூடாது.

பற்று அற்ற நிலை:

மேற்கூறியவற்றை ஒருவர் நன்றாக புரிந்து கொண் டால், பௌதிக ஆசைகள் அவரை அலைக்கழிக்காது. அப்பொழுது பௌதிக நம்பிக்கையும் குறைய ஆரம் பிக்கும்.

நாம் நமது புத்தியை பயன்படுத்தி பௌதிக அல்லது உலக விஷயங்களின் தற்காலிக தன்மையை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

மேலும் விதுரர் திருதிராஷ்டரிடம், “பிறவியிலிருந்தே நீங்கள் பார்வை இல்லாதிருக்கிறீர். சமீப காலமாக உமது காதும் சரியாக கேட்கவில்லை. உங்களுடைய ஞாபக் சக்தி குறைந்துவிட்டதுமின்றி புத்தியும் தடுமாறுகிறது. உங்களுடைய பற்கள் தளர்ந்து விட்டன. உங்களுடைய கல்லீரல் பாதிப்படைந்துள்ளது. மேலும் உங்களுக்கு இருமல்,சலி தொல்லையும் உள்ளது. இறக்க மனமில் லாமல் மானத்தையும், கௌரவத்தையும் நீர் தியாகம் செய்து, வாழவும் தயாராக இருந்தபோதிலும், உம்மு டைய இந்த உடல் பழைய உடையை போல் ஒருநாள் அழிந்தே தீரும்” என்று கூறினார்.

பௌதிக வாழ்வில் இருக்கும் எல்லாரைப் போன்றும், திருதராஷ்டிரர் இறக்க விருப்பம் இல்லாமல் இருந்தார். அவர் எப்படியாவது சுக போகத்துடன் வாழ்நாளை கடத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் ஒருவர் அப்படி எண்ணினாலும், அவருடைய பௌதிக உடல் அவரை நீண்ட நாட்கள் இங்கே இருக்கவிடாது. ஒரு காலக் கட்டத்தில் இந்த பௌதிக உடல் அழிந்தே தீரும். அதை புரிந்து கொள்ளாமல், திருதராஷ்டிரர் சுகபோகமான வாழ்க்கை தொடரும் என எண்ணிக் கொண்டிருந்தார்.

ஸ்ரீல பிரபுபாதா இதைப்பற்றி கூறுகையில், 5000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு திருதராஷ்டிரர் தான் இருந்தார். ஆனால் இன்று ஒவ்வொரு வீட்டிலும் திருதராஷ்டிரர் இருக்கின்றனர்.

பெரும்பாலும் மக்கள் தற்காலிகமான இன்பத்தை தரும் பௌதிகமான விஷயத்தினால் கவரப் பட்டு இருக்கின்றனர். எனவே மனிதப் பிறவியின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளாமல் வாழ்க்கையை விரயம் செய்கின்றனர். இப்படியாக அவர்கள் வாழ்வு எந்த விதமான ஆன்மீக நம்பிக்கையும் இல்லாமல் கழிந்து கொண்டிருக்கிறது.

பகவான் மேல் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்:

நாம் பகவானின் விருப்பத்தை அறிந்து, பௌதிக வாழ்வில் சிறிது பற்றற்ற நிலைக்கு வந்த பின்னர், நாம் அடுத்ததாக கிருஷ்ணரின் மேல் உறுதியான நம்பிக்கையை வளர்க்க முயற்சி செய்ய வேண்டும். நாம் கிருஷ்ணரின் மேல் நம்பிக்கையை வைத்தால், அவரது உபதேசங்களின் மேல் தானாக நம்பிக்கை உருவாகும். பிறகு பகவானின் கருணையினால் நாம் ஆன்மீக ஆத்மா என்பதை புரிந்து கொள்ள முடியும். நாம் அவரை சார்ந்துள்ள சிறு ஜீவன் என்றும் புரிந்து கொள்ளமுடியும், இதனை புரிந்து கொள்வதால், நாம் பகவானுக்கும் மற்றும் அவருடைய பக்தர்களுக்கும் சேவை செய்வதற்காக தயாராவோம்.

பிறகு அவருடைய சக்திவாய்ந்த வார்த்தை களினால் விதுரர் திருதராஷ்டிரை எப்படியாவது நம்பிக்கையுடைவராக மாற்ற விரும்பினார்.

விதுரர் கூறினார், “யாரொருவர் பகவானின் மேல்  தானாகவோ அல்லது பிறரின் உபதேச த்தினாலோ, இந்த ஜடவுலக துன்பத்தையும், நிலையற்ற தன்மை யையும் அறிந்து இதயத்தில் வாழும் பரம புருஷரிடம் முழு நம்பிக்கை கொண்டு, வீட்டை விட்டு வெளியேருகிறாரோ அவர் முதல் தரமான மனிதனாவார்’

-ஸ்ரீமத் பாகவதம் 1.13.27

விதுரர் திருதராஷ்டிரிடம் கூறுவது போல் நாம் ஒவ்வொருவரும் பகவானிடம் நம்பிக்கை கொள்ள வேண்டும். முழுமுதற்கடவுளாகிய கிருஷ்ணர் நம்மிடம் இருக்கிறார். அவர் தனது பக்தர்களை பாதுகாக்கிறார். இதை அறிகின்ற பக்தர்கள் பரம புருஷரிடம் உறுதியான நம்பிக்கை கொள்ள துவங்குகின்றனர்.

நமது சுதந்திரத்தை சரியாக பயன் படுத்துவது

அடுத்ததாக விதுரர் திருதராஷ்டிரிடம் வேண்டுகோள் விடுத்தார். தனது சுதந்திரத்தை திருதராஷ்டிரர் சரியாக பயன்படுத்த வேண்டும் என்று ஆணித்தரமாக கூறினார். ஏனெனில் திருதராஷ்டிரருக்கு வாய்ப்பு இருந்தது. அவர் பௌதிக விஷயங்களின் மேல் நம்பிக்கை வைத்து பௌதிக வாழ்க்கையை தொடரலாம். அல்லது ஆன்மீக வாழ்க்கையின் மேல் நம்பிக்கை வைத்து மேற்கொள்ள ஆன்மீக முயற்சிகளை ஆரம்பிக்கலாம். இந்த இரண்டு வாய்ப்பும் திருதராஷ்டிரிடம் இருந்தது.

 விதுரர் திருதராஷ்டிரிடம் கூறினார், எனவே மக்களின் நற்குணங்களை குறைத்துவிடும் அக்காலம்  விரைவில்  வரப்போகிறது என்பதால், உறவினர்களுக்கு  அறிவிக்காமல் உடனே தயவு செய்து வடக்கு நோக்கி புறப்படுங்கள்” என்று கூறினார்.

பகவானின் மேல் உள்ள நம்பிக்கையை வலுப்படுத்துவது:

திருதராஷ்டிரர் சுகமான அரண்மணை வாழ்க்கையை விரும்பி, அரண்மணையிலேயே தங்கி இருந்திருக்கலாம். ஆனால் அவர் தனது சுதந்திரத்தை அப்படி பயன்டுத்தவில்லை. திருதராஷ்டிரர் தனது மனைவி காந்தாரியுடன் காட்டிற்கு சென்றார் . இங்கு திருதராஷ்டிரர், விதுரரின் கருணையால் தனது நம்பிக்கையை வலுப்படுத்திக் கொண்டார். வலுப்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல்  சரியான பாதையை நோக்கி புறப்பட்டார்.

ஸ்வேதாஷ்வதர உபநிஷத்தில் (6.23), “யாரொருவர் பகவான் மற்றும் ஆன்மீக குருவின் மீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளாரோ, அவர்களுக்கு எல்லா வேத ஞானமும் தானாக வெளிப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே முக்கியமாக தூய பக்தர்கள் மற்றும் சாதுக்களின் தொடர்பினால், ஒருவர் தனது பௌதிக நம்பிக்கையை ஆன்மீக நம்பிக்கையாக மாற்ற முடியும்.

ஸ்ரீல பிரபுபாதாவும் தனது பாகவத உரையில் கூறும்பொழுது, “என்னுடைய ஆன்மீக குரு ஸ்ரீலபக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி அவர்களுடன் எனது சந்திப்பு சில நிமிடங்கள் தான் எனக்கு கிடைத்தது. இருப்பினும் அவரது தெய்வீக கருணையை நான் பெற தவறியிருந்தால், ஸ்ரீமத் பாகவதத்தை ஆங்கிலத்தில் விவரிக்கும் இப்பெரும் சேவை எனக்கு கிடைக்காமல் போயிருக்கும். நான் அவரை சந்திக்காமல் இருந்திருந்தால், நான் இன்று ஒரு பெறும் தொழிலதிபராக மாறியிருக்க கூடும். அதுமட்டுமில்லாமல் ஒரு உண்மையான பகவத் தொண்டில், என்னால் ஈடுபட்டிருக்க முடியாதும் போயிருக்கும்” என்று குறிப்பிடுகிறார்.

  • [ஸ்ரீமத் பாகவதம் 1.13.29 பொருளுரை)

ஸ்ரீல நரோத்தம தாஸ் தாகூரரின் குரு வந்தன பாடலுக்கு விளக்கம் அளிக்கையில் ஸ்ரீல பிரபுபாதா கூறுகிறார், “நீங்கள் உண்மையிலேயே ஆன்மீக வாழ்வில் முன்னேற விரும்பினால், ஆன்மீக குருவின் மேல் உறுதியான நம்பிக்கை கொள்ள வேண்டும். இதுதான் மொத்த வைஷ்ணவ தத்துவமே ஆகும். அதை செய்யாத வரையில் நாம் மூடர்களாகவே இருப்போம். நாம் ஆன்மீக குருவின் உபதேசங்களை உறுதியாக ஏற்றுக் கொண்டு, அதை உயிரும் மூச்சுமாக செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். அதுவே வெற்றி!”

எல்லாவற்றையும் இழந்த பிறகும், திருதராஷ்டிரர் அரண்மனையில் சுகமாக வாழலாம் என நினைத்துக் கொண்டிருந்தார். மிக உயர்ந்த பக்தரான விதுரரின் உறுதியான மற்றும் கூர்மையான உபதேசங்களினால் திருதராஷ்டிரர் பௌதிக வாழ்வின் மேலிருந்த தனது நம்பிக்கை மாற்றிக் கொண்டார். இப்படி மாற்றியதின் மூலமாக திருதராஷ்டிரர் தன்னுடைய ஆன்மீக வாழ்விற்கு வித்திட்டார்.

எப்படி திருதராஷ்டிரர் மிகச் சிறந்த பக்தரான விதுரரின் மேல் நம்பிக்கை வைத்து ஆன்மீக பாதையை மேற்கொண்டாரோ, அதுபோல நாமும் ஸ்ரீல பிரபுபாதா மற்றும் அவரது பிரதிநிதிகளின் மேல் உறுதியான நம்பிக்கை வைத்து, அவர்களின் கருணையால் ஆன்மீக வாழ்க்கையை தொடர வேண்டும். ஹரே கிருஷ்ணா.

Thanks – KA Nov-17

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question