Srila Prabhupada (Tamil) / ஸ்ரீல பிரபுபாதர்
தெய்வத்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தெய்வத்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் 1896ம் வருடம் கொல்கத்தாவில் முரையான வைஷ்ணவ குடும்பத்தில் தோன்றினார். பக்தித் தொண்டின் நெறிகளை சிறு வயதிலிருந்தே கற்று வந்த அவர்,தனது ஆன்மீக குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி கேஸ்வாமியை 1922ம் வருடம் கொல்கத்தாவில் முதன்முறையாக சந்தித்தார். அறுபத்து நாங்கு கெளடீய மடங்களை நிறுவியிருந்தவரும் புகழ்பெற்ற ஆச்சாரியருமான ஸ்ரீல பக்திசித்தாந்தருக்கு இந்த படித்த இளைஞனை மிகவும் பிடித்திருந்தது, வேதஞானத்தை பிரச்சாரம் செய்யும் பணிக்கு, அதிலும் குறிப்பாக ஆங்கிலம் பேசும் நாடுகளில் ஆங்கிலத்தில் பிரச்சாரம் செய்வதற்கு, வாழ்வை அர்ப்பணிக்கும்படி அந்த இளைஞனைக் கேட்டுக் கொண்டார், பின்னர், 1933இல் ஸ்ரீல பிரபுபாதர் முறையாக அவரிடம் தீட்சை பெற்று சீடரானார். ஸ்ரீல பிரப...