A biography of Lord Krishna (Tamil) / கிருஷ்ணரின் வாழ்க்கைக் குறிப்பு
மாதவன் அவதரித்த மதுராபிறப்பற்ற இறைவன் இவ்வுலகிற்கு இறங்கி வரும்போது, அவதாரம் என்று அறியப்படுகிறார். ஆன்மீக உலகமான கோலோக விருந்தாவனத்திலிருக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் (மாதவன்) தனது பக்தர்களைக் காப்பதற்காகவும் துஷ்டர்களை அழிப்பதற்காகவும் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் சுமார் 5000 வருடங்களுக்கு முன்பு இப்பூவுலகில் தற்போதைய டில்லி நகரத்திலிருந்து 150 கிமீ தெற்கிலுள்ள மதுரா நகரில் தோன்றினார். இதனால் மதுரா நகரம் மிகவுயர்ந்த புண்ணிய பூமியாகும்.கி.மு. 3228, ஜூலை 19ம் நாள், ஸ்ரவன மாத தேய்பிறையின் அஷ்டமி திதியின் நள்ளிரவில், மதுராவின் சிறைச்சாலையில் கிருஷ்ணர் குழந்தையாக அவதரித்தார், அன்றிரவே கோகுலம் சென்றடைந்தார்.3 வருடம், 4 மாதங்கள் வரை கோகுலத்தில் வசித்த பின், விருந்தாவனம் சென்றார். மேலும் 3 வருடம் 4 மாதங்களை விருந்தாவனத்தில் கழித்த பின், 6 வருடம் 8 மாத வயதில், நந்தகிராமத...