Thursday, November 21

முன்னேற்ற வாழ்வை விரும்பும் மனிதர்கள் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் .

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

முன்னேற்ற வாழ்வை விரும்பும் மனிதர்கள் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் .

 ஒருவனுடைய குணங்கள் தான் முன்னேற்றத்தையும் வீழ்ச்சியையும் அவனு டைய வாழ்வில் கொண்டு வந்து சேர்க்கும் . ஆகையினால் கீழ்க்காணும் விஷயங்களை அறிந்து அதன்படி நடக்க வேண்டும் . தேவையுள்ள குணங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் . தேவையற்றவற்றை விட வேண்டும் .

மனிதர்களுக்கு தேவையுள்ள குணங்கள்

1 ) மனிதர்களுக்கு சுகம் தரும் ஆறு விஷயங்கள்

1. நோயற்ற வாழ்வு

2. கடனற்ற வாழ்வு

3. சொந்த உழைப்பில் வாழ்வது

4. பக்தர்களின் நட்பு

5. ஏழ்மையின்றி வாழ்வது

6. பயமின்றி வாழ்வது

2 ) மனிதர்களுக்கு இருக்கும் ஐந்து பலம்

1. சொந்த பலம்

2. ஆலோசகனின் பலம்

3. தன பலம்

4. தந்தை மற்றும் பாட்டனிடமிருந்து பெற்ற பலம்

5 புத்தி பலம்

3 ) மனிதர்களின் திறமையை வளர்க்கும் 8 விஷயங்கள

1. அறிவு

2. நற்குணம்

3. சாஸ்திர ஞானம்

4. வீரம்

5. புலனடக்கம்

6. அதிகம் பேசாமை

7. இயன்ற வரை தானம் கொடுத்தல்

8. நன்றிக் கடன்

4)செல்வத்தைப் பெருக்க ஏழு விஷயங்கள்

1. தைரியம்

2 மன அடக்கம்

3 புலனடக்கம்

4 தூய்மை

5 இரக்கம்

6 மென்மையான பேச்சு

7 நண்பனுக்குத் துரோகம் செய்யாமை .

மனிதர்களுக்கு தேவையற்ற குணங்கள்

1 ) மனிதனுக்குத் துக்கம் தரும் ஆறு விஷயங்கள்

1. பொறாமை

2. வெறுப்பு

3. கோபம்

4. சந்தேகம்

5. திருப்தியற்ற நிலை

6. மற்றவர் உழைப்பில் வாழ்வது

2 ) கோபத்தால் தோன்றும் எட்டு விளைவுகள்

1. கோள் சொல்லுதல்

2. வீண் துணிச்சல்

3. துரோகம்

4. பொறாமை

5. திருட்டு

6. தூற்றுதல் ( ஏசுதல் )

7. வாய்ச் சண்டை

8. காரணமின்றி அடித்தல்

3 ) காமத்தால் வரும் பத்து விளைவுகள்

1. மற்ற ஜீவன்களை இம்சித்தல்

2. வாக்குவாதம்

3. பகல் தூக்கம்

4. பெண்கள் சேர்க்கை

5. குடிபோதை

6. பிறரை நிந்தித்தல்

7. சூதாட்டம்

8. கூத்தாட்டம்

9. பொய்

10. வீணாகச் சுற்றித் திரிவது .

—————————————————–

~உயர்திரு. மார்க்கண்டேய ரிஷி தாஸ்

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question