சுதர்சனர்: பரம புருஷ பகவானால் (விஷ்ணு அல்லது கிருஷ்ணர்) தமது சொந்த ஆயுதமாக
ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த ஆயுதம், பிரம்மாஸ்திரம் அல்லது அதற்கொப்பான பிற
ஆயுதங்களையோ விட அதிக சக்தி வாய்ந்ததாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு
அக்னிதேவன் இந்த ஆயுதத்தை அளித்தார் என்று வேத இலக்கியங்கள் சிலவற்றில்
கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் பகவான் இந்த ஆயுதத்தை நித்தியமாக தமது
கையில் ஏந்தியிருக்கிறார். ருக்ம மகாராஜன் ருக்மினியை பகவானுக்கு அளித்த அதே
முறையில்தான் அக்னிதேவனும் இந்த ஆயுதத்தை கிருஷ்ணருக்கு அளித்தார். இத்தகைய
அன்பளிப்புக்களை பகவான் தமது பக்தர்களிடமிருந்து ஏற்றுக்கொள்கிறார். அந்த
அன்பளிப்புகள் நித்தியமாக அவருக்குச் சொந்தமானவை என்றாலும் அவற்றை அவர்
அவ்வாறு ஏற்றுக் கொள்கிறார். மகாபாரதத்தின் ஆதி பர்வத்தில் இந்த ஆயுதத்தைப் பற்றிய
விரிவான விளக்கம் ஒன்றுள்ளது. தன்னுடன் போட்டியிட்ட சிசுபாலனைக் கொல்ல பகவான்
ஸ்ரீ கிருஷ்ணர் இந்த ஆயுதத்தை உபயோகித்தார். இந்த ஆயுதத்தினால் சால்வனையும் கூட
அவர் கொன்றார். மேலும் சில சமயங்களில், நண்பனான அர்ஜுனனுடைய எதிரிகளை
அர்ஜுனன் கொல்வதற்கு அதை உபயோகிக்க வேண்டுமென்று பகவான் விரும்பினார்.
(மகாபாரதம், விராம பர்வம் 56.3)