தேவையான பொருட்கள் :
1. பக்விட் – 1 கப் (250 கிராம்)
2. கேரட் (துருவியது) – 1 கப்
3. பீட்ரூட் (துருவியது) – 1 கப்
4. குடமிளகாய் (பச்சை) – 1 கப்
5. தக்காளி – 3
6. சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
7. இஞ்சி பச்சைமிளகாய் – 3
8. நெய் (அ) கடலை எண்ணெய் – தேவையான அளவு
9. ராக்சால்ட் (உப்பு) – தேவையான அளவு
செய்முறை:
பக்விட்டை 10 (அ) 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் தோசை மாவு பதத்தில் அரைத்து உப்பு போட்டு கலக்கி வைத்து கொள்ளவும்.
சட்னி :
வானெலியை அடுப்பில் வைத்து நெய் (அ) கடலை எண்ணையை தேவையான அளவு ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் சீரக்ம் நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சியை போட்டு பொன்நிறம் வந்ததும் துருவிய காய்கறிகளை போட்டு மூடிவைக்க வேண்டிம், அடிக்கடி கரண்டியால் கிளறி விடவும். பின்னர் தக்காளியை கட்பண்ணி அதனுடன் சேர்த்து உப்பு போட்டு நன்றாக வதக்கவும். அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும், பின்னர் மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும் இப்போது வெஜிடபுள் சட்னி தயார்.
பிறகு தோசை கல்லை வைத்து பக்விட் மாவில் தோசை வார்த்து எடுக்கவும்.ஏகாதசி அன்று இந்த பாதார்தத்தை பகவானுக்கு அற்பணித்து, எற்றுக் கொள்ளலாம். இது ஏகாதசி விதிமுறைக்கு உட்பட்டது.