உருளை கிழங்கு அல்வா (ஏகாதசி)
தேவையான பொருட்கள் :-
*உருளை கிழங்கு துருவியது – 1 கப்
*கல்கண்டு பொடிசெய்தது – ½ கப்
*காய்ச்சிய பசும்பால் – ½ கப்
*திராட்சை, முந்திரி, ஏலக்காய், நெய் – தேவயான அளவு
————————————————————–
உருளை கிழங்கை நன்றாக கழுவிக் கொண்டு தோலை நீக்கி காய் துருவில் துருவிக் கொள்ளவும். துருவிய உருளையை 3,4 தடவை தண்ணீரில் நன்றாக அலசிக் கொள்ளவும். தண்ணீரை வடிகட்டிவிட்டு குக்கரில் போட்டு ½ கப் பசும் பாலைவிட்டு 1 விசில் வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கவும், தட்டில் கொட்டி நன்றாக ஆறவிடவும், கணமான பாத்திரத்தில் பொடி செய்த கல்கண்டு பொடியை போட்டு ¼ டம்ளர் தண்ணீரை விட்டு கொதிக்க விட்டு, பாகு கம்பிப் பதம் (மிகவும் நீர் தன்மை இல்லாமல் அதேசமயம் மிகவும் இறுக்கமாக இல்லாமல் இருப்பது) வந்தவுடன். ஆற வைத்த உருளையை போட்டு கிண்டிவிடவும், கெட்டி ஆனதும் நெய்யில் வருத்த திராட்சை, முந்திரி போட்டு, ஏலக்காய் பொடிதூவி அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.
ஏகாதசி அன்று இந்த பாதார்தத்தை பகவானுக்கு அற்பணித்து, எற்றுக் கொள்ளலாம். இது ஏகாதசி விதிமுறைக்கு உட்பட்டது.