சத்தியகாமா எனும் சிறுவன் கௌதம முனியிடம் தன்னைச் சீடனாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டான் . அதற்கு கௌதமர் அந்தச் சிறுவனிடம் எனதருமை சிறுவனே உனது கோத்ரம் என்ன ? என்று கேட்டார். சிறுவன் பதில் கூறினான். எனக்கு என்னுடைய கோத்ரமோ குடும்ப வரலாறோ எதுவும் தெரியாது. நான் என் தாயிடம் இது பற்றிக் கேட்ட பொழுது அவள் பின்வருமாறு பதில் கூறினாள். அவள் தனது இளமைப்பருவத்தில் நிறைய ஆடவர்களை சந்தித்துள்ளதாகவும், அவர்களின் தொடர்பினால் நீ பிறந்தாய் என்றும் கூறினாள். நிறைய ஆடவர்கள் என்பதால் உன்னுடைய தந்தை யார் ? என்றும் எந்தக் கோத்ரம் என்றும் தெரியாது. எனக்குத் தெரிந்த தெல்லாம் என் பெயர் ” ஜபாலா ‘ ‘ உன் பெயர் ” சத்தியகாமா ” என்றாள். ஆகையினால் நான் ” ஜபாலா ” வின் சத்தியகாமா ஆவேன் என்றான். அதற்கு கௌதம முனிவர் கூறினார் . எனதருமை சிறுவனே நீ சத்தியத்தை பேசியிருக்கின்றாய். ஆகையால் நீ பிராமணனாகக் கருதப்பட வேண்டும்.
பிரமணன் ஒருவன் மட்டும்தான். சுவையற்ற செய்தியாக இருந்தாலும், உண்மையை மறைக்காமல் பேசுவான் என்று கூறி அச்சிறுவனைச் சீடனாக ஏற்றுக் கொண்டார்
— சாந்தோக்ய உபநிஷத்