Friday, November 8

பக்விட் பக்கோடா

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

தேவையான பொருட்கள்:
பக்வீட் – 1 கப் (250 கிராம்)
சிறியதாக கட் பண்ணிய முட்டை கோஸ் – ¼ கப்
கேரட் துருவியது- ¼ கப்
இஞ்சி துருவியது – தேவையான அளவு
சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (அ) 3
ராக் சால்ட் – தேவையான அளவு
பொரிக்க – கடலை எண்ணெய் (அ) தேங்காய் எண்ணெய்

செய்முறை:

பக்விட்டை 10 நிமிடம் தண்ணிரில் ஊற வைக்க வேண்டும் தண்ணீரை சுத்தமாக வடிகட்டி மிக்சியில் அரைத்துக் கொள்ளவும் பின் அந்த மாவுடன் முட்டை கோஸ், கேரட் துருவல் இஞ்சி, பச்சைமிளகாய் சீரகம், ராக்சால்ட் எல்லாவற்றையும் கலந்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும் பிறகு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் கலவையை கையில் எடுத்து பிசைந்து விடவும். வெந்ததும் எடுத்து விடவும். இப்பொழுது பக்விட் பக்கோடா தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question