வித்யா-வினய-ஸம்பன்னே
ப்ராஹ்மணே கவி ஹஸ்தினி
ஷுனி சைவ ஷ்வ-பாகே ச
பண்டிதா: ஸம-தர்ஷின:
Synonyms:
இஹ — இவ்வாழ்வில்; ஏவ — நிச்சியமாக; தை: — அவர்களால்; ஜித: — வெல்லப்பட்டு; ஸர்க: — பிறப்பும் இறப்பும்; யேஷாம் — அவர்களது; ஸாம்யே — சமநோக்கில்; ஸ்திதம் — நிலைபெற்று; மன: — மனம்; நிர்தோஷம் — தோஷமில்லாத; ஹி — நிச்சியமாக; ஸமம் — சமத்துவதில்; ப்ரஹ்ம — பிரம்மனைப் போன்று; தஸ்மாத் — எனவே; ப்ரஹ்மணி — பிரம்மனில்; தே — அவர்கள்; ஸ்திதா: — நிலைபெற்றுள்ளனர்.
Translation:
அடக்கமுள்ள பண்டிதர்கள் தங்களது உண்மை ஞானத்தின் வாயிலாக, கற்றறிந்த தன்னடக்கமுள்ள பிராமணன், பசு யானை, நாய், நாயைத் தின்பவன் (கீழ் ஜாதி) என அனை வரையும் சம நோக்கில் காண்கின்றனர்.
Purport:
உயிரின வேறுபாடுகளையும் , ஜாதி வேறுபாடுகளையும் கிருஷ்ண பக்தன் காண்பதில்லை. சமூக ரீதியில், பிராமணனும் கீழ் ஜாதியினனும் வேறுபட்டவை. உயிரின ரீதியில், நாய், பசு, யானை ஆகியவை வேறுபட்டவை. ஆனால் உடலின் இது போன்ற வேற்றுமைகள் கற்றறிந்த ஆன்மீகவாதியின் கண்ணோட்டத்தில் அர்த்தமற்றவை. ஆன்மீக வாதிகளின் அத்தகு பார்வை பரமனுடன் அவர்களுக்கு உள்ள உறவினால் சாத்தியமாகின்றது. ஏனெனில், பரம புருஷர் தனது விரிவங்கமான பரமாத்மாவின் உருவில் அனைவரின் இதயத்திலும் வீற்றுள்ளார். பரமனைப் பற்றிய இந்த ஞானமே உண்மையான ஞானமாகும். பல்வேறு இனங்களைச் சார்ந்த அல்லது ஜாதிகளைச் சார்ந்த உடல்களைப் பொறுத்தவரை, கடவுள் எல்லாரிடமும் சமமான அன்புடையவராக இருக்கிறார். ஏனெனில் அவர் எல்லா ஜீவன்களையும் தனது நண்பனாக நடத்துகிறார். இருப்பினும், ஜீவனின் எல்லா சூழ்நிலைகளிலும் அவர் பரமாத்மாவாகவே உள்ளார். பிராமணனின் உடலும் கீழ் ஜாதியினனின் உடலும் ஒன்றல்ல என்ற போதிலும், கடவுள், பிராமணனின் உடலிலும் கீழ் ஜாதியினனின் உடலிலும் பரமாத்மாவாக வீற்றுள்ளார். ஜட இயற்கையின் பல்வேறு குணங்களின் பலதரப்பட்ட பௌதிகப் படைப்புகளே உடல்கள், ஆனால் உடலினுள் உள்ள ஆத்மாவும் பரமாத்மாவும் ஒரே ஆன்மீக குணத்தை உடையவர்கள். குணத்தில் ஆத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும உள்ள ஒற்றுமை, அளவில் அவர்களை சமமாக்குவதில்லை. ஏனெனில், தனிப்பட்ட ஆத்மா ஒரு குறிப்பிட்ட உடலில் மட்டுமே உள்ளான், பரமாத்மாவோ அனைவரது உடலிலும் வீற்றுள்ளார். கிருஷ்ண பக்தன் இதனை முழுமையாக அறிந்துள்ளான். எனவே, அவனே உண்மையான பண்டிதனும் சமநோக்கு உடையவனும் ஆவான். பரமாத்மா, ஆத்மா இருவருமே, உணர்வுடையவர்கள், நித்தியமானவர்கள், ஆனந்தமயமானவர்கள்- இதுவே இவர்களிடையே உள்ள ஒற்றுமை. ஆனால் வேறுபாடு என்னவெனில், தனிப்பட்ட ஆத்மா தனது உடலை மட்டுமே உணரக்கூடியவன், பரமாத்மாவோ எல்லா உடல்களையும் உணரக்கூடியவர். வேற்றுமை பார்க்காமல் பரமாத்மா எல்லா உடல்களிலும் வீற்றுள்ளார்.