Wednesday, October 30

பகவத் கீதை – 17.25

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

தத் இத் – யன ஸந்தாய
பலம் யக்ஞ – தப : – க்ரியா :
தான – க்ரியாஷ் , ச விவிதா :
க்ரியத்தே மோக்ஷ – காங்க்ஷிபி :

தத் : – அந்த ; இதி – அவ்வாறு ; அவரி , ஸந்தா ய – விரும்பாமல் ; பலம் – பலனை ; யக்ஞ – யாகம் ; தப : – மற்றும் தவத்தின் ; க்ரியா : – செயல்கள் ; தான – தானத்தின் ; கிரியா : – செயல்கள் ; ச : — மேலும் ; விவிதா : – பல்வேறு ; க்ரியந்தே – செய்யப்படுகின்றன ; மோக்ஷ- காங்க்ஷிபி : – உண்மையில் முக்தியை விரும்புபவர்களால் .

பலனை எதிர்பார்க்காமல் , பல்வேறு வகையான யாகம் , தவம் , மற்றும் தானத்தினை தத் என்னும் சப்தத்துடன் மேற்கொள்ள வேண்டும் . அத்தகு உன்னத செயல்களின் நோக்கம் பௌதிக பந்தத்திலிருந்து விடுபடுவதாகும் .

பொருளுரை : ஆன்மீக நிலைக்கு உயர்வு பெற வேண்டுமானால் , ஒருவன் எந்தவிதமான பௌதிக இலாபத்திற்காகவும் செயல்படக் கூடாது . ஆன்மீக உலகமான முழுமுதற் கடவுளின் திருநாட்டிற்கு மாற்றம் பெறும் உன்னத நோக்கத்துடன் மட்டுமே செயல்கள் செய்யப்பட வேண்டும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question