Thursday, March 28

நிதாய் பத கமல கோடி சந்த்ர சுசிதல (நரோத்தம தாஸ் தாகுர்)

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

1

நிதாய் பத கமல கோடி சந்த்ர சுசிதல 
ஜே சாயாய் ரகத ஜுராய்
ஹேனோ நிதாய் வினா பாய்தே, ராதா க்ருஷ்ண பாய்தே நாஇ 
த்ருடா கோரி தரோ நிதாஓர் பாய்

2

சே சம்பந்த நாஹி ஜார், ப்ருதா ஜன்ம கேலோ தார் 
சேஇ பசு போரோ துராசார்
நிதாய் நா போலிலோ முகே மஜிலோ சம்சார சகே
வித்யா குலே கி கோரிபே தார்

3

அஹங்காரே மத்த ஹோஇதா நிதாய் பத பாசரியா
அசத்யேரே சத்ய கோரி மானி
 நிதாய்யேர் கோருணா ஹபே ப்ரஜே ராதா க்ருஷ்ண பாபே
தரோ நிதாய் சரண துகானி

4

நிதாய்யேர் சரண சத்ய தாஹார சேவக நித்ய
நிதாய் பாத சதா கோரோ ஆச
நரோத்தம போரோ துகி நிதாய் மோரே கோரோ சுகி 
ராகோ ராங்கா சரணேர பாச


1

பகவான் நித்யானந்தரின் தாமரைப் பாதங்கள் ஒருவனுக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய  பல கோடி சந்திரகளிலிருந்து வரும் ஒளியை வழங்கக் கூடிய, புகழிடமாகும். உலகில் உண்மையான அமைதி வேண்டுமெனில், பகவான் நித்யானந்தரையே புகலிடமாகக் கொள்ள வேண்டும். ஒருவன் பகவான் நித்யானந்தரின் தாமரைப் பாதங்களின் நிழலை புகலிடமாகக் கொள்ளவில்லை எனில் அவனுக்கு ராதா கிருஷ்ணரை அணுகுவது என்பது மிகக் கடினமானதாகும் ஒருவன் உண்மையில் ராதா கிருஷ்ணரின் நாட்டிய கோஷ்டிக்குள் நுழைய விரும்பினால், அவன் பகவான் நித்யானந்தரின் தாமரைப் பாதங்களை மிக உறுதியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

2

யாரொருவர் பகவான் நித்யானந்தருடன் உள்ள உறவினை நிலைநாட்டாமல் உள்ளாரோ, அவர் தமது மனித வாழ்வை அழித்துக் கொண்டவராகக் கருதப்படுகிறார். அத்தகையவர், உண்மையில் கட்டுப்பாட்டை இழந்த மிருகமாவார். ஏனெனில் அவர் என்றுமே பகவான் நித்யானந்தரின் புனித நாமத்தை உச்சரிக்காததால், பொய்யான ஜட இன்பத்தில் மூழ்கியுள்ளார். அவருடைய பயனற்ற கல்வியும், குடும்ப மரபும் அவருக்கு எப்படி உதவும் ?

3

பொய்யான மதிப்பினாலும் தன்னை உடலாகவே அடையாளமாக கருதுவதாலும்  ஒருவன் முட்டாள்தனமாக,  . “யார் இந்த நித்யானந்தர்? இவர் எனக்கு என்ன செய்ய முடியும்?  நான் கண்டுகொள்ள மாட்டேன் என்று அகங்காரத்தில் எண்ணுகின்றான். அதன் முடிவானது, பொய்யை மெய்யாக ஏற்றுக்கொள்கிறார் என்பதாகும். நீ உண்மையில் ராதா கிருஷ்ணரின் சங்கத்தை அணுக விரும்பினால், நீ முதலில் பகவான் நித்யானந்தரின் கருணையை அடைய வேண்டும். அவர் உம்மை நோக்கி கருணை புரியும் போது உம்மால் ராதா கிருஷ்ணரை சுலபமாக அணுக முடியும். ஆகவே நீ பகவான் நித்யானந்தரின் தாமரைப் பாதங்களை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும்

4

பகவான் நித்யானந்தரின் தாமரைப் பாதங்கள், மாயை அன்று, அவை உண்மையானவை. யாரொருவர் பகவான் நித்யானந்தரின் தெய்வீக அன்புத் தொண்டில் ஈடுபட்டுள்ளாரோ, அவரும் தெய்வீகமானவரே எப்பொழுதும் பகவான் நித்யானந்தரின் தாமரைப் பாதங்களைப் பற்ற முயற்சி செய்ய வேண்டும். இந்த நரோத்தம தாசன் மிகவும் வருத்தத்தில் உள்ளேன் ஆகவே, நான் பகவான் நித்யானந்தரிடம் என்னை இன்பமாக வைத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன். எனது அன்பிற்குரிய பகவானே, தயவு செய்து என்னை தங்களின் தாமரைப் பாதங்களின் அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.

+2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question