1. உலகில் உண்மையான அமைதி மற்றும் ஒற்றுமை ஏற்படவும், வாழ்க்கையின் உயர்ந்த மதிப்பை உணராமல் செயல்படுவதை தவிர்க்கவும், ஆன்மீக ஞானத்தை முறைப்படி பரப்பி, ஆன்மீக வாழ்க்கையின் நுணுக்கங்களை பற்றி அனைத்து மக்களுக்கும் கற்றுக் கொடுப்பது.
2. இந்தியாவின் மிகப்பெரும் சாஸ்திரங்களான ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தில் குறிப்பிட்டவாறு, கிருஷ்ண உணர்வை பரப்புவது.
3. இஸ்கான் இயக்கத்தின் உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு அருகே அழைத்து வருவது. இதன் மூலமாக உறுப்பினர்கள் மற்றும் மனித சமுதாயத்தினரிடையே ஒவ்வொருவரும் ஆத்மா மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அம்சம் என்ற எண்ணத்தை மேலோங்கச் செய்வது.
4. பகவான் ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவின் உபதேசங்களின் படி, சங்கீர்த்தன இயக்கத்தை, அதாவது பகவானின் புனித நாமத்தை ஒன்று கூடி உச்சரிப்பது பற்றி எடுத்துரைப்பது மற்றும் உற்சாகப்படுத்துவது.
5. உறுப்பினர்கள் மற்றும் மனித சமூகத்திற்காக பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்றும் பகவானின் லீலைகள் அடங்கிய புனிதஸ்தலத்தை நிர்மாணிப்பது.
6. எளிமையான மற்றும் இயற்கையான வாழ்க்கை முறையை எப்படி வாழ்வது என எடுத்துரைக்க உறுப்பினர்களை நெருக்கமாக ஒருங்கிணைப்பது
7. மேற்குறிப்பிட்ட நோக்கங்களை எல்லாம் நிறைவேற்றுவதற்காக, பத்திரிக்கைகள், இதழ்கள், புத்தகங்கள் மற்றும் எழுத்துக்கள் ஆகியவற்றை பிரசுரித்து விநியோகிப்பது.
இஸ்கான் கிருஷ்ண பக்தி மூலம், நாம் யார் என்பதையும், கடவுள் யார் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் ஆன்மீகவாதிகள், மடாதிபதிகள், ஆதினங்கள், பெரியவர்கள் இருந்தாலும் கிருஷ்ண பக்தி இயக்கம் மட்டுமே மக்களிடம் நேரடியாகச் சென்று கிருஷ்ண பக்தியை சொல்லி தருகிறார்கள்.
இதில் நானும் பயன்பெற்று கொண்டிருக்கிறேன்.
ஸ்ரீ ல பிரபுபாதர், மதுரை திருப்பாலை இஸ்கான் கோவிலுக்கும் நன்றி