Srila Bhaktisiddhanta Sarasvati Thakura (Tamil) / ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரா
ஸ்ரீல அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த ஸரஸ்வதி தாகூரா, ஸ்ரீ க்ஷேத்ர தாமில் (ஜெகந்நாத் பூரியில்) தோன்றினார். தனது குழந்தைப் பருவத்தில் அவர் விரைவாக வேதங்களை கற்றுத்தேர்ந்தார், பகவத் கீதையை மனப்பாடம் செய்தார், மேலும் தனது தந்தையின் தத்துவ படைப்புகளை கண்டு மகிழ்ந்தார். அவர் தனது பரந்த அறிவுக்கு "தி லிவிங் என்சைக்ளோபீடியா" என்று அறியப்பட்டார்.
கெளடிய வைஷ்ணவத்திலிருந்து சாதி மற்றும் தத்துவ விலகல்களுக்கு எதிராக அவர் உறுதியாக பிரசங்கித்தார். நான்கு வைஷ்ணவ சம்பிரதாயங்களையும் அவர்களின் போதனைகளையும் வெளியிட்டு ஒன்றிணைக்க முயன்றார். ஸ்ரீல சரஸ்வதி தாகூரா வைஷ்ணவ சித்தாந்தத்தின் அச்சமற்ற மற்றும் சக்திவாய்ந்த விநியோகத்திற்காக நரிசிம்ஹ குரு என்ற பட்டத்தை பெற்றார். "சிம்ஹ குருவை" எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற...