Deva Shayani (Padma) Ekadashi (Tamil) /தேவசயனி (பத்ம) ஏகாதசி
இந்த ஏகாதசியின் மற்ற பெயர் : ஷயனி / மஹா / பத்ம / தேவ்போதி / அஷத ஆஷாட மாதம், சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியை தேவசயனி (பத்ம) ஏகாதசியாக கொண்டாடுவர். தேவசயனி ஏகாதசியின் விரத மகிமையை நாம் காண்போம். ஸ்ரீ மந் நாராயணன் சயனம் மேற்கொள்ளும் சுக்ல ஏகாதசி இதுவாகும். எல்லா ஏகாதசிகளும் புண்ணியத்தைத் தருவதாயினும் பகவான் நாராயணனுக்கு உகந்த இந்த ஏகாதசியை கடைபிடிப்பது மிகுந்த புண்ணியம் தரும்.தர்மத்தை எந்த சூழ்நிலையிலும் விடாது காக்கும் மஹாராஜா யுதிஷ்டிரர், ஸ்ரீ கிருஷ்ணரிடம் - " ஒ! கேசவா, ஆஷாட மாதத்தின் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயர், அன்றைய சுபதினத்தில் வழிபட வேண்டிய கடவுளர் யார். அன்று விரதம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன என்பதை பற்றி விரிவாக சொல்லுங்கள்" என்று கூறினார்.பிரபு ஸ்ரீ கிருஷ்ணர் பின் வருமாறு கூறத் தொடங்கினார்.- "ஒ! பூமியின் பாதுகாவலரே, ஒரு முறை பிரம்மதேவர் தன்னுட...