Kolavecha Sridhar (Tamil) / கோலாவேசா ஸ்ரீதர்
கோலாவேசா ஸ்ரீதர்__________________________________ஸ்ரீதரர் மிகவும் ஏழ்மையான பிராமணர், தொன்னைகளைச் செய்வதற்கான வாழை மரப்பட்டைகளை விற்று வாழ்ந்து வந்தார். பெரும்பாலும் அவருக்கு ஒரு வாழைத் தோட்டம் இருந்திருக்கலாம்; அதிலிருந்து இலைகள், பட்டைகள் மற்றும் பழங்களைச் சேகரித்து தினமும் சந்தையில் விற்று வந்தார். தமது வருமானத்தில் பாதியினை அவர் கங்கையை வழிபடுவதில் செலவிட்டார், மீதியினை வாழ்வாதாரத்திற்காக உபயோகித்தார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காஜியினை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியபோது, ஸ்ரீதரர் குதூகலத்தினால் ஆடினார். அவருடைய கமண்டலத்திலிருந்து மஹாபிரபு நீர் அருந்துவது வழக்கம். சைதன்யர் சந்நியாசம் ஏற்பதற்கு முன்பாக ஸ்ரீதரர் ஸச்சி தேவியிடம் பகவானுக்குச் சமைப்பதற்காக கீரை வழங்கினார். ஆண்டுதோறும் அவர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவைக் காண்பதற்காக ஜகந்நாத புரிக்குச் சென்றார். கவி-கர்ணபூரரின் கருத்து ...