
ஏகாதசி
விரதங்களில் அதிமுக்கியமானது “ஏகாதசி” விரதம் ஆகும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயர் உண்டு. வேதசாஸ்திரங்கள்ம் “ஏகாதசி”, “கிருஷ்ணரின் திருநாள்” என்று குறிப்பிடுகிறது. மேலும் ஏகாதசி விரதத்தினை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.
ஏகாதசி என்றால் என்ன ?
சம்ஸ்கிருதத்தில் ஏகாதசி என்பது தமிழில் பதினொன்று என்று பொருள். ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசி வரும். அதாவது, அமாவாசையிலிருந்து 11 வது நாளையும், பெளர்ணமியிலிருந்து 11வது நாளையும் குறிக்கும். இந்த இரண்டு நாள்களிலும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.
ஏகாதசி விரதம் ஏன் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் ?
பொதுவாக விரதங்கள், கடைபிடித்தால் நல்ல பலங்கள் கிடைக்கும். கடைபிடிக்காவிட்டால் எந்த அபாயமும் கிடையாது. ஆனால் ஏகாதசி விரதம் எப்படியென்றால், இந்த விரதத்தை கடைபிடிக்கவில்லை என்றால் பாவங்கள் வந்து சேரும். அதே சமயம் ஏகாத...