Glories of Guru (Tamil) / குருவின் மகிமை
துக்காராம் மகராஜ் ஒருமுறை புண்ய ஸ்தல யாத்ரை சென்றார் பக்தர்களுடன் . வழியெல்லாம் ஊர் ஊராக நடந்து சென்றார்கள். வழியெங்கும் அநேகர் அவரது விட்டல நாம சங்கீர்த்தன மழையில் நனைந்தனர்.பஜனை பிரவாஹமாக அவர்கள் சென்ற தெருவெல்லாம் ஓடி வழிந்து குளிர்வித்தது.ரஞ்சனா என்று சிறிய அழகிய கிராமத்தை அடைந்தார்கள். அங்கு மூலா என்ற நதியும் பிருவா என்ற நதியும் இணைந்து சங்கமமாகிறது. அந்த புண்ய நதியில் ஸ்நானம் செய்து விட்டு அவர்கள் அன்றைக்கு பிக்ஷைக்கு உஞ்சவ்ரித்தி எடுத்தார்கள்.துக்காராம் மறுநாளைக்கு என்று மட்டுமல்ல மறு வேளைக்குக்கூட எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளாதவர் அல்லவா?. எனவே அன்றாட பிக்ஷை உஞ்சவ்ரித்தி மூலம் தான். அவர்கள் விட்டல சங்கீர்த்தனம் பண்ணிக்கொண்டு அந்த கிராமத்தின் ஒரு பிரதான வீதியில் வந்து கொண்டிருந்தார்கள்.அங்கங்கு நின்று பிக்ஷாவந்தனம் பெற்றுக்கொள்வார்கள். குறிப்பிட்ட இடத்திற்குப...