Amalaki Ekadasi (Tamil) / ஆமலாகீ ஏகாதசி (நெல்லிக்கனி ஏகாதசி)
பால்குண மாதம் - சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை ஆமலாகீ ஏகாதசியாக கொண்டாடுவர். ஆமலாகீ ஏகாதசிவிரத மகிமையை நாம் காண்போம். 80,000 ,ரிஷி முனிவர்கள் சூத முனிவரின் உபன்யாசத்தைக் கேட்பதற்காக கூடியிருந்த பொழுது சூதர் "முனிவர்களே,முன்பொரு முறை நடந்த சம்பவம் இது. மஹான் ராஜா மாந்தாதா வசிஷ்டரிடம் கேட்டார்," பிரம்மரிஷி வசிஷ்டரே, தாங்கள் என்னை ஆசீர்வதிக்க நினைத்தால், மங்களமான நன்மை அளிக்கும் விரதம் ஏதாவது உண்டென்றால், அந்த விரதத்தைப் பற்றிய கதை, அதன் மஹிமை இவற்றைப் பற்றி கூறிஅருளுங்கள்." என்றார். மஹரிஷி வசிஷ்டர்," ராஜன், உத்தமமானதும், மோட்சப்பிராப்தியை அளிக்கக் கூடியதும் ஆன ஆமலாகீ ஏகாதசி விரதம் அனைத்து விரதங்களிலும் மேலானது ஆகும்." என்றார்.ராஜா மாந்தாதா வசிஷ்டரிடம், "வேதங்களில் பாண்டித்யம் பெற்ற முனி சிரேஷ்டரே, அமலாகீ விரதம் உருவானகதை, விரதம் அனுஷ்டிக்கும் விதிமுறை இவற்றைப் பற்றி கருணையுடன் விஸ...