Bhaimi Ekadashi (Tamil) / பைமி (அ) ஜெய ஏகாதசி
https://youtu.be/UkMTaz7h-vE
தை -மாசி மாதம் - சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை ஜெயா ஏகாதசியாக கொண்டாடுவர். ஜெயா ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம்.
மஹா தனுர்தாரியான அர்ஜூனன், ஸ்ரீ கிருஷ்ணரிடம்," ஹே பிரபோ! தை, மாசி மாதத்தின் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியைப் பற்றியும், அன்று எந்த தெய்வத்திற்கு விசேஷ அர்ச்சனை, ஆராதனை செய்ய வேண்டும் என்பது பற்றியும், விரதத்தின் மஹிமை, விரதம் அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணிய பலன் இவற்றைப் பற்றி விஸ்தாரமாக அறிய விரும்புகிறேன். தாங்கள் க்ருபை புரிய வேண்டும்." என்று வேண்டினான்.ஸ்ரீ கிருஷ்ணர், "ஹே பார்த்தா! தை -மாசி மாதத்தின் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி ஜெயா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி விரதத்தை முறையோடு அனுஷ்டித்தால், அகாலமரணத்தால் பூத, ப்ரேத, பிசாச ரூபம் பெற்ற ஆத்மாக்கள், அந்நிலையிலிருந்து விடுதலைபெறுவ...