ஸ்ரீல பிரபுபாதாவின் குருவான பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூரின் உரையிலிருந்து
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் அறிவிக்கின்றார் சற்றும் மாறாத உறுதியுடனும் நம்பிக்கையுடனும் யோகப் பயிற்சியில் ஈடுபடவேண்டும் என்று
யோகப்பயிற்சியாளன் உறுதியான தீர்மானம்முடையவன் மாறாமல் பயிற்சியை பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். இறுதி வெற்றியில் நிச்சயம் கொண்டு மிகப் பொறுமையுடன் அவ்வழியில் முன்னேற்ற முடியும். வெற்றியடைவதில் என்ன தாமதம் ஏற்பட்டாலும் மனம் தளரக்கூடாது முறையாகக் கடைப்பிடிப்பவனுக்கு வெற்றி நிச்சயமே பக்தி யோகத்தை பற்றி ரூப கோஸ்வாமி பின்வருமாறு கூறுகிறார்.
இதயப்பூர்வமாக உற்சாகம் பொறுமை உறுதி பக்தர்களின் உறவில் விதிக்கப்பட்ட கடமைகளை ஆற்றுவதாலான நிச்சயம் சாத்வீக செயலில் இடையறாது ஈடுபடுதல் பக்தி யோகம் முறை இவற்றால் வெற்றிகரமாக பின்பற்றப்பட முடியும். உறுதியை பொருத்தவரை கடல் அலையில் தனது முட்டைகளை பறிகொடுத்த குருவியின் மாதிரியைப் பின்பற்ற வேண்டும்.
கடற்கரையில் ஒரு பெண் குருவி முட்டையிட்டது ஆனால் பெருங்கடலும் தனது அலைகளால் அந்த முட்டைகளை இழுத்துச் சென்று விட்டது குருவி மிகவும் துயருற்று தனது முட்டைகளை திரும்ப தருமாறு கடலை கேட்டது. அவளது முறையீட்டதற்கு கடல் செவிசாய்க்க கூட இல்லை இதனால் வெகுண்ட குருவி கடலை வற்றச் செய்வது என்று முடிவு செய்துகொண்டு தனது சின்னஞ்சிறு அழகால் கடல் நீரை காலி செய்ய முற்பட்டது அந்த குருவி.
எல்லோரும் அந்த குருவியின் இயலாத உறுதியைக் கண்டு வேடிக்கை செய்தனர்.
அவளது இந்தவிதமான செய்தி பரவ விஷ்ணுவின் மாபெரும் பறவை வாகனமான கருடன் அதனை கேட்டார் தனது சிறு சகோதரி பறவையின் மீது தயவு கொண்டு அவர் குருவியை காண வந்தார். அந்த சிறு குழுவின் உறுதியைக் கண்டு மனம் மகிழ்ந்த கருடன் உதவி செய்வதாக உறுதி கூறினார். இந்த விதமாக குருவியின் முட்டைகளை உடனடியாக திருப்பி தருமாறு ஆணையிட்டார். கடல் பயந்துபோய் குருவியின் அந்த முட்டைகளை திரும்பி வந்து விட்டதாம். இவ்வாறாக கருடனின் கருணையால் குருவி மீண்டும் மகிழ்ச்சி அடைந்தது
அதுபோல கிருஷ்ண உணர்வு பக்தியோகம் மிகக் கடினமாகத் தோன்றலாம் ஆனால் கொள்கைகளை பெறும் உறுதியோடு ஒருவர் பின்பற்றினால் பகவான் கிருஷ்ணர் அவருக்கு உதவுகின்றார்
இக்கதையில் வரும் குருவி தான் ஜீவாத்மாக்கள் முட்டைகள் என்பது நாம் இழந்த ஆன்மீக சொத்தாக ஒப்பிடப்படுகிறது மாபெரும் கடல் என்பது மாயை சக்தியை குறிப்பிடுகிறது நாம் உறுதியான கொள்கைகளை விதிமுறைகளை பின்பற்றினால் குருவிக்கு எப்படி கருடன் உதவி செய்கிறது அது போல பகவானும் நமக்கு உதவி புரிகின்றார். மீண்டும் ஆன்மீக நிலையில் நாம் இன்பமாக வாழலாம் இவ்வாறாக இறைவனை காண ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும்.
ஸ்ரீ கிருஷ்ணரை காண்பதற்கான நமது விருப்பத்தில் நம்பிக்கை பெறவேண்டும் இதனைப் பற்றி கூறுகையில் இஸ்கான் ஸ்தாபக ஆச்சாரியர் தெய்வதிரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி அவர்கள் கூறியது சிறுகதை ஒன்று உள்ளது அந்த அளவிற்கு நல்லதாக இருக்கும் கவனமுடன் படிக்க
ஒருசமயம் பாகவதர் சொற்பொழிவு ஆற்றியனார் ஒரு பாகவதர் தனது பிரசங்கத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏராளமான பொன் நகைகளை அணிந்துகொண்டு காட்டிற்கு மாடுகளை மேய்க்க செல்வார் என்று கூறியுள்ளார். அந்தக் கூட்டத்தில் ஒரு திருடன் இருந்தான் அதனைக் கேட்டு அவன் நாம் ஏன் விருந்தாவன காட்டிற்கு சென்று ஏராளமான நகைகள் அணிந்துள்ள அச்சிறுவனை பிடித்து அவரிடம் உள்ள நகைகளை எல்லாம் எடுத்துக் கொள்ளக் கூடாது அப்படி செய்தால் நாம் பெரிய பணக்காரனாகி விடலாம் என்று எண்ணினான். அவனிடமிருந்து ஒரே தகுதி நான் கிருஷ்ணரை காணவேண்டும் என்பதுதான் கிருஷ்ணரை காண வேண்டும் என்ற கவலையும் ஆர்வமும் கிருஷ்ணரை விருந்தாவனத்தில் காண்பதற்கு சாத்தியமாக அமைந்தது.
பாகவதர் கூறியது போன்றே திருடன் பார்த்த கிருஷ்ணர் ஏராளமான பொன் நகைகளை அணிந்து இருந்தார்.
ஸ்ரீ கிருஷ்ணரிடம் கிருஷ்ண! கிருஷ்ண! நீர் மிகவும் நல்ல பையன் ஆயிற்றே நீ மிகவும் பணக்காரன் ஆயிற்றே. நான் உன்னிடம் உள்ள நகைகளை சிலவற்றை எடுத்துக் கொள்ளலாமா என்று தந்திரமாக கேட்டேன்.
அதை கேட்ட கிருஷ்ணர் முடியாது முடியாது எனது அன்னை என்னை கோபிப்பாள் தரவே முடியாது என்று பதிலளித்தார் கிருஷ்ணர் ஒரு அழகிய சிறுவனாக இருந்ததால் அவருடன் கிருஷ்ணர் மீதான ஆர்வம் அதிகரித்துக் கொண்டே போயிற்று ஸ்ரீ கிருஷ்ணனிடம் தொடர்பால் அவன் புனிதம் அடைந்தான் நகைகள் மீதான ஆசைகளை விட்டு விட்டு கிருஷ்ணன் பக்தி செய்வது என்று ஆகிவிட்டான்
இறுதியில் கிருஷ்ணர் சரி சரி எடுத்துக்கொள் என்றார் இவ்வாறு இறைவனைக் காண நாமும் உண்மையான ஆற்றல் உடையவராக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் நான் புனிதம் அடையலாம்
கிருஷ்ணருடன் திருட வேண்டும் என்ற எண்ணம் உடனே புனிதமடைந்து பகவானைப் பார்த்து அவருடைய பக்தனாக மாறினால் உண்மையிலேயே இறைவனுக்காக ஒருவன் செயலாற்றினால் அவருடைய நிலையை விளக்க வேண்டிய அவசியமே இல்லை
நம்முடைய உண்மையான தந்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் இதனை அவர் பகவத் கீதை 14.4 குறிப்பிடுகின்றார்
எனவே தமது தந்தையை தெரிந்து அவருடன் உறவு கொள்ள அனைவருக்கும் தகுதி உள்ளது ஆனால் இது நமது நம்பிக்கையை பொருத்தது அல்ல நாம் எவ்வளவு நம்பிக்கையுடன் தன் ( பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம்) தந்தையிடம் சரண் அடைகிறோம் அவ்வளவு அவர் தன்னை வழிகாட்டுகிறார்
பகவானின் புனித நாமத்தை ஜெபத்தின் மூலமாக கிருஷ்ணரை அடையமுடியும் இவ்வாறாக நாம் பழகிக் கொள்வதோடு எப்போதும் கிருஷ்ணரே நினைக்கும் படியாக நாம் நமது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும்
கிருஷ்ண பக்தியில் முன்னேறுவதற்கு பக்தித் தொண்டின் வழிமுறையை கடைப்பிடித்து பகவானுக்கு சேவை செய்து நமது கடமையாகும்
நமது அன்றாட பணிகளை பார்த்துக்கொண்டே கிருஷ்ண பக்தியை பயன்படுத்தி பக்தர்கள் அனைத்து நன்மைகளையும் பெற்று பேரானந்தம் அடைகின்றார்கள் இவற்றை நாம் நடைமுறைப்படுத்த பக்தர்களுடன் தொடர்பு கொண்டாலே போதும் அவர்கள் நமக்கு வேண்டிய வழியை காட்டுவார்கள்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடன் உள்ள தொடர்பினால் பக்தர்கள் பல நற்குணங்களை பெற்று பேரானந்தம் அடைகிறார்கள் பற்பல அற்புதங்கள் நிகழ்கின்றன
கிருஷ்ண உணர்வு உள்ள அற்புதம் என்னவென்றால் நாம் பக்தித் தொண்டில் எவ்வளவு ஆர்வத்துடன் ஈடுபடுகின்றோம் அதைவிட பத்து மடங்கு அதிகமான ஆர்வத்துடன் நமக்கு உதவி புரிய காத்துக் கொண்டிருப்பதாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உறுதி கூறுகிறார்